சென்னை வந்தடைந்த சிஎஸ்கே சிங்கங்கள்.. ரசிகர்கள் உற்சாகம்
ஐபிஎல் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள நிலையில், ஆகஸ்ட் 20ம் தேதி அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கின்றன. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சிஎஸ்கே வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி முகாம் நடக்கிறது. அதற்காக சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா, கரன் ஷர்மா ஆகிய வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.
இதுவரை 3 முறை ஐபிஎல் டைட்டிலை வென்றுள்ள தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, 4வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது
சென்னையில் நடக்கும் 5 நாட்கள் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள ரெய்னா, தீபக் சாஹர், பியூஷ் சாவல் ஆகிய வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.
பெரிய ஸ்பின் பவுலிங் பட்டாளத்தை கொண்டுள்ள சிஎஸ்கே அணியின், ஸ்பின்னர்களில் ஒருவரான கரன் ஷர்மாவும் சென்னை வந்துள்ளார்.
சென்னையில் வந்திறங்கிய உற்சாகத்தில் ரெய்னா உள்ளிட்ட ர்
சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளை சுரேஷ் ரெய்னாவின் செல்ஃபி.
சென்னையில் களமிறங்கியுள்ள சிஎஸ்கே சிங்கங்கள், விரைவில் பயிற்சியை தொடங்கவுள்ளனர். ஐபிஎல் காய்ச்சல் தொடங்கிவிட்டதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளன