MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • டி20 உலகக்கோப்பை.. ஹசரங்கா, தீக்‌ஷனா சுழல் வலையில் சிக்கிய அயர்லாந்து.. இலங்கை அணி வெற்றி!

டி20 உலகக்கோப்பை.. ஹசரங்கா, தீக்‌ஷனா சுழல் வலையில் சிக்கிய அயர்லாந்து.. இலங்கை அணி வெற்றி!

T20 World Cup 2026: அயர்லாந்து அணியின் பவுலிங் நன்றாக அமைந்தது. ஆனால் அவர்களின் பேட்டிங்கும், பீல்டிங்கும் மோசமாக இருந்தது தோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டது.

2 Min read
Author : Rayar r
Published : Feb 08 2026, 11:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
டி20 உலகக்கோப்பை 2026
Image Credit : Getty

டி20 உலகக்கோப்பை 2026

டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. 

இலங்கை அணிக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஒரு கட்டத்தில் 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், பின்னர் 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.

குசல் மெண்டிஸ், கமிந்து சூப்பர் பேட்டிங்

பதும் நிசங்கா (24), காமில் மிஷாரா (14), பவன் ரத்நாயக்க (5), துனித் வெல்லாலகே (10) ஆகியோர் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு, குசல் மெண்டிஸ் - கமிந்து மெண்டிஸ் ஜோடி சேர்த்த 67 ரன்கள் இலங்கைக்கு கைகொடுத்தது.

 குசல் மெண்டிஸ் 43 பந்துகளில் 56 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 19 பந்துகளில் 44 ரன்களும் எடுத்தனர். அயர்லாந்து சார்பில் ஜார்ஜ் டாக்ரெல், பேரி மெக்கார்த்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
22
அயர்லாந்து அணி 143 ரன்களுக்கு ஆல் அவுட்
Image Credit : Getty

அயர்லாந்து அணி 143 ரன்களுக்கு ஆல் அவுட்

பின்னர் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. அயர்லாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்கத்திலேயே கேப்டன் பால் ஸ்டிர்லிங்கின் (6) விக்கெட்டை அயர்லாந்து இழந்தது. தீக்‌ஷனாவின் பந்தில் அவர் போல்ட் ஆனார். பின்னர், ராஸ் அடேர் (34), ஹாரி டெக்டர் (40), லோர்கன் டக்கர் (21) ஆகியோர் ஓரளவு சிறப்பாக விளையாடி அவுட் ஆனார்கள்.

ஹசரங்கா, தீக்‌ஷனா அசத்தல்

ஆனால் பெஞ்சமின் கால்டிஸ் (4), கரேத் டெலானி (0), கர்டிஸ் கேம்ஃபர் (13), மார்க் அடேர் (10), ஜார்ஜ் டாக்ரெல் (9), மேத்யூ ஹம்ப்ரிஸ் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணி வெற்றி பெற்ற முக்கிய காரணமாக விளங்கினார்கள். 

அயர்லாந்து அணியின் பவுலிங் நன்றாக அமைந்தது. ஆனால் அவர்களின் பேட்டிங்கும், பீல்டிங்கும் மோசமாக இருந்தது தோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டது.

Related Articles

Related image1
T20 உலகக்கோப்பை: மும்பை காவல்துறையால் கைதான USA வீரர்.. வைரலாகும் ஹர்மீத் சிங்கின் பழைய கதை!
Related image2
வைபவ் சூர்யவன்ஷி அடுத்த U19 உலகக்கோப்பையில் ஆட முடியாது.. ஷாக் கொடுத்த பிசிசிஐ.. ஏன்?

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026: RCB vs GT மேட்ச் மழையால் ரத்தானால் பைனலுக்கு யாருக்கு வாய்ப்பு! ரிசர்வ் டே உண்டா?
Recommended image2
IPL 2026 Winner : இந்த வருஷம் ஐபிஎல் கப் இந்த டீமுக்கு தான்...! ஹர்திக் பாண்டியாவுக்குள் இப்படி ஒரு பவரா?
Recommended image3
IPL 2026: பிளேஆஃப்-க்குள் நுழைந்தது ராஜஸ்தான்! 'டாப் 4' அணிகளின் பிளேஆஃப் அட்டவணை இதோ!
Related Stories
Recommended image1
T20 உலகக்கோப்பை: மும்பை காவல்துறையால் கைதான USA வீரர்.. வைரலாகும் ஹர்மீத் சிங்கின் பழைய கதை!
Recommended image2
வைபவ் சூர்யவன்ஷி அடுத்த U19 உலகக்கோப்பையில் ஆட முடியாது.. ஷாக் கொடுத்த பிசிசிஐ.. ஏன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved