- Home
- Sports
- Sports Cricket
- ஒரே போட்டியில் அடுக்கடுக்கான சாதனை! இங்கிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய சுப்மன் கில்
ஒரே போட்டியில் அடுக்கடுக்கான சாதனை! இங்கிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய சுப்மன் கில்
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் அதிரடியாக சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.

ஒரே போட்டியில் அடுக்கடுக்கான சாதனை! இங்கிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய சுப்மன் கில்
இந்தியா, இங்கிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார்.
சதம் விளாசிய சுப்மன் கில்
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில் 95 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ஏற்கனவே நடைபெற்ற முதல் இரண்டு ஆட்டங்கள் முறைய கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 87, 60 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அதிரடி காட்டிய கில்
இந்நிலையில் இன்றைய போட்டியில் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், புதிய மைல் கல்லை எட்டி உள்ளார். அதன்படி ஒருநாள் போட்டிகளில் வெறும் 50 இன்னிங்ஸ்களை மட்டும் விளையாடியுள்ள கில் 2500 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தியா Vs இங்கிலாந்து
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 102 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதில் மெத்தமாக 14 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும்.