- Home
- Sports
- Sports Cricket
- IND vs AUS: டெஸ்ட்டில் 2வது சதம் விளாசினார் ஷுப்மன் கில்..! சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் கில் அபார சாதனை
IND vs AUS: டெஸ்ட்டில் 2வது சதம் விளாசினார் ஷுப்மன் கில்..! சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் கில் அபார சாதனை
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஷுப்மன் கில் அபார சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, உஸ்மான் கவாஜா (180) மற்றும் கேமரூன் க்ர்ன் (114) ஆகிய இருவரின் அபாரமான சதங்களால் முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.
அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்கள். முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா 35 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் கில்லுடன் ஜோடி சேர்ந்த புஜாரா சிறப்பாக பேட்டிங் ஆட, 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 113 ரன்களை சேர்த்தனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவின் சாதனையை தகர்த்து முரளிதரனை விரட்டும் அஷ்வின்
அபாரமாக பேட்டிங் ஆடிய ஷுப்மன் கில் சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 2வது சதத்தை பதிவு செய்தார். மேலும் ஒரே ஆண்டில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 ஃபார்மட்டிலும் சதமடித்த 4வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சதமடித்திருந்த ஷுப்மன் கில் இந்த டெஸ்ட்டிலும் சதமடித்து சாதனை படைத்துள்ளார். ஷுப்மன் கில்லுக்கு 2023ம் ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் அபாரமாக ஆடிவருகிறார். அவரது சதத்தால் 200 ரன்களை கடந்து இந்திய அணி ஆடிவருகிறது. சதமடித்த கில்லுடன் கோலி ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.