MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஷேன் வார்னின் மாஸ்டர் பிளான்.. மறைந்த பிறகும் குடும்பத்திற்கு ரூ.450 கோடி அள்ளிக்கொடுத்தது எப்படி?

ஷேன் வார்னின் மாஸ்டர் பிளான்.. மறைந்த பிறகும் குடும்பத்திற்கு ரூ.450 கோடி அள்ளிக்கொடுத்தது எப்படி?

2008-ல் நடந்த முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஷேன் வார்ன் இருந்தார். அவரது தலைமையில்தான் அந்த அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

2 Min read
Author : Rayar r
Published : Mar 25 2026, 09:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஷேன் வார்ன் குடும்பத்துக்கு ஜாக்பாட்
Image Credit : x

ஷேன் வார்ன் குடும்பத்துக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவர் தன் குடும்பத்திற்கு கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொடுத்து வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்பனை செய்யப்பட்டது மூலம் ஷேன் வார்ன் குடும்பத்துக்கு ரூ.450 கோடி கிடைக்க உள்ளது. இதன்மூலம் கிரிக்கெட் உலகில் மீண்டும் வார்னின் பெயர் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

24
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்பனை
Image Credit : ANI

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்பனை

அதாவது அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி (Kal Somani) தலைமையிலான ஒரு கூட்டமைப்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1.63 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ₹15,290 கோடி) வாங்கியுள்ளது. இந்த அணி விற்பனையின் மூலம், ஷேன் வார்னின் குடும்பத்திற்கு ₹450 கோடி முதல் ₹460 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
ஷேன் வார்ன் இறப்புக்கு 'அந்த' மாத்திரை தான் காரணமா? 3 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட உண்மை!
Related image2
சிஎஸ்கே பலம் என்ன? பலவீனம் என்ன? தோனி எந்த இடத்தில் பேட்டிங்? பிளேயிங் லெவன் இதோ!
34
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஷேன் வார்ன்
Image Credit : our own

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஷேன் வார்ன்

2008-ல் நடந்த முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஷேன் வார்ன் இருந்தார். அவரது தலைமையில்தான் அந்த அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அப்போது, தனது ஒப்பந்தத்தில் ஒரு முக்கியமான நிபந்தனையை வார்ன் சேர்த்திருந்தார். அந்த ஒப்பந்தத்தின் காரணமாக, 18 ஆண்டுகளுக்குப் பிறகும் அவரது குடும்பம் பலனடைகிறது. இந்தச் சம்பவம் கிரிக்கெட் மற்றும் வர்த்தக உலகில் வார்னின் மதிப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

44
மொத்தமாக ரூ.450 கோடி அள்ளும் ஷேன் வார்ன் குடும்பம்
Image Credit : Getty

மொத்தமாக ரூ.450 கோடி அள்ளும் ஷேன் வார்ன் குடும்பம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷேன் வார்னை கேப்டனாக நியமித்ததோடு, கிரிக்கெட் தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் அணி நிர்வாகம் அவருக்கு வழங்கியது. மேலும், அவர் அணிக்காக விளையாடும் ஒவ்வொரு வருடத்திற்கும், அணியின் உரிமையில் 0.75% பங்கு அவருக்கு வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. வார்ன் ராஜஸ்தான் அணிக்காக நான்கு சீசன்கள் விளையாடினார். இதனால், அவரது மொத்த பங்கு 3% ஆக உயர்ந்தது.

இந்த 3% பங்கு மதிப்புதான் இப்போது கோடிக்கணக்கில் அவரது குடும்பத்திற்குக் கிடைக்க உள்ளது. வார்னின் குடும்பம் இந்த பங்குகளை விற்றால் உடனடியாக இந்தப் பணத்தைப் பெறலாம் அல்லது பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கவும் முடியும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மதிப்பு உயர்வு

2008-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மதிப்பு வெறும் 67 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால், 18 ஆண்டுகளில் அதன் மதிப்பு 1.63 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இதுவே ஐபிஎல் தொடரின் பிரம்மாண்டமான வர்த்தக வெற்றிக்குச் சான்றாகும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
விளையாட்டு
ராஜஸ்தான் ராயல்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sakib Hussain Net Worth: முதல் மேட்ச்லயே 4 விக்கெட்! யார் இந்த சகிப் ஹுசைன்? சொத்து மதிப்பு எவ்வளவு?
Recommended image2
Sakib Hussain: 'ஷூ வாங்க காசு இல்ல'னு அழுத மகன்.. நகையை விற்ற தாய்! SRH வீரரின் பகீர் பின்னணி..
Recommended image3
CSK vs KKR: மைதானத்தில் சோகம்! கருப்புப் பட்டை அணிந்து விளையாடிய வீரர்கள் - பின்னணி என்ன?
Related Stories
Recommended image1
ஷேன் வார்ன் இறப்புக்கு 'அந்த' மாத்திரை தான் காரணமா? 3 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட உண்மை!
Recommended image2
சிஎஸ்கே பலம் என்ன? பலவீனம் என்ன? தோனி எந்த இடத்தில் பேட்டிங்? பிளேயிங் லெவன் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved