IPL 2025: மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸை தக்க வைக்க ஷாருக் கான், காவ்யா மாறன் திட்டம்?
Kavya Maran, Sunrisers Hyderabad: ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் போன்ற சிறந்த வீரர்களைத் தக்கவைத்துக் கொள்வது குறித்து கேகேஆர் மற்றும் எஸ்ஆர்ஹெச் அணிகள் பல்வேறு யுக்திகளைக் கையாள உள்ளன.
KKR vs SRH, IPL 2025
ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் போன்ற சிறந்த வீரர்களைத் தக்கவைத்துக் கொள்வது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) ஆகிய இரு அணிகளுக்கும் உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற ஒரு சிறப்பை பெற்றுத் தரும். கேகேஆரின் இணை உரிமையாளரான பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மற்றும் எஸ் ஆர் ஹெச்சின் இணை உரிமையாளரான காவ்யா மாறன் இருவருக்கும், ஐபிஎல் தக்க வைப்பு விதி மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸை எளிதாக தக்க வைத்துக் கொள்ள முடியும்.
IPL 2025 Retentions
ஐபிஎல் புதிய விதிமுறைகளின்படி ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 5 கேப்டு வீரர்கள் மற்றும் 2 அன்கேப்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் உரிமையாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சியின் போது குறைந்தது 8 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள ஷாருக் கான் வலியுறுத்தினார். ஷாருக் கான் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப ஆர்டிஎம் உள்பட 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளித்தது.
Indian Premier League
இதே போன்று காவ்யா மாறன் வெளிநாடு மற்றும் உள்நாட்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான உச்சவரம்பை நீக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கும் சம்மதம் தெரிவித்த பிசிசிஐ அந்த உச்சவரம்பை நீக்கியது.
இதன் மூலமாக சன்ரைசர் ஹைதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகிய வெளிநாட்டு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். இதே போன்று கேகேஆர் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங், பிலிப் சால்ட், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
Pat Cummins and Mitchell Starc
ஐபிஎல் 2024 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கேகேஆர் அணிக்காக ரூ.24.75 கோடிக்கு ஆஸி., வேகப்பந்து வீச்சாளர் ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், அவர் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் இறுதிப் போட்டியில் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். ஆனாலும், அவரை கேகேஆர் தக்க வைக்குமா, விடுவிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அதோடு, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 3 முறை 250 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற சாதனையை ஹைதராபாத் படைத்தது. ஆர்சிபிக்கு எதிராக 287 ரன்கள் குவித்து வரலாற்று சாதனையை படைத்தது. மேலும், மும்பைக்கு எதிராக 277/3 ரன்கள் குவித்தது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 266/7 ரன்கள் குவித்தது. ஆதலால் இந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.