MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஓபனராக களம் இறக்கப்பட்ட இஷான்; கேள்விக்குறியாகும் சஞ்சுவின் எதிர்காலம்..

ஓபனராக களம் இறக்கப்பட்ட இஷான்; கேள்விக்குறியாகும் சஞ்சுவின் எதிர்காலம்..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இதற்கான தெளிவான சிக்னல்கள் தெரிந்தன. மிடில் ஆர்டரில் கூட சஞ்சுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

1 Min read
Author : Velmurugan s
Published : Feb 05 2026, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பிளேயிங் 11ல் இடம் பெறாத சஞ்சு
Image Credit : Screenshot

பிளேயிங் 11ல் இடம் பெறாத சஞ்சு

டி20 போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன் உலகக்கோப்பை தொடரின் பிளேயிங் 11ல் இடம் பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் சஞ்சுவின் ஓபனிங் இடத்தில் இசான் கிஷன் இறக்கப்பட்டதால் சஞ்சு பிளேயிங் 11ல் இடம் பெற மாட்டாரென்றே சொல்லப்படுகிறது.

24
சஞ்சுவின் மோசமான ஃபார்ம்
Image Credit : Social Media

சஞ்சுவின் மோசமான ஃபார்ம்

டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்ட சஞ்சு சாம்சன் மொத்தமாகவே வெறும் 45 ரன்களை மட்டுமே சேர்த்தார். குறிப்பாக 5வது மற்றும் கடைசி போட்டியானது அவரது சொந்த ஊரான கேரளாவில் நடைபெற்றது. அந்த போட்டியில் கூட அவர் ரன் சேர்க்க தடுமாறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் முதல் 4 போட்டிகளில் விக்கெட் கீப்பராக களம் இறக்கப்பட்ட சஞ்சு விடம் இருந்து 5வது போட்டியில் விக்கெட் கீப்பிங் கிளவுஸ்ம் பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக இசான் கிஷன் கீப்பராக செயல்பட்டது குறிப்படத்தக்கது.

Related Articles

Related image1
T20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் நீக்கம்?.. நிரந்தர இடம் பிடிக்கும் இளம் அதிரடி வீரர்!
Related image2
டி20 உலகக்கோப்பை IND vs USA.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. சிக்சர் மன்னனுக்கு இடம்.. இந்தியா பிளேயிங் லெவன்!
34
சஞ்சு Vs திலக் வர்மா
Image Credit : AFP

சஞ்சு Vs திலக் வர்மா

அணியின் மிடில் ஆர்டரில் ஆக்ரோஷம் காட்டி வந்த திலக் வர்மா காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். திலக் வர்மாக உலகக்கோப்பை தொடருக்குள் முழு உடல் தகுதி பெற்றுவிடுவார் என அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. திலக் வர்மா அணிக்கு திரும்பும் பட்சத்தில் சஞ்சுவின் மிடில் ஆர்டர் இடமும் கேள்விக்குறியாக்கப்படும்.

44
சஞ்சுவுக்கு ஆதரவு கரம்..?
Image Credit : Getty

சஞ்சுவுக்கு ஆதரவு கரம்..?

பிட்ச் வேகம் மற்றும் பவுன்ஸிற்கு சஞ்சுவால் பழகிக்கொள்ள முடியும் என பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னி மோர்கல் போன்றோர் கருதுகின்றனர். இந்த ஆதரவு அவருக்கு நம்பிக்கையை அளிக்கலாம். உலகக் கோப்பை அணியில் இருப்பதால், யாருக்கேனும் காயம் அல்லது ஃபார்ம் சரிவு ஏற்பட்டால் சஞ்சுவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கலாம். எனவே, அவர் தயாராக இருப்பது அவசியம்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சஞ்சு சாம்சன்
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்தியா
இந்திய கிரிக்கெட் அணி
Latest Videos
Recommended Stories
Recommended image1
லண்டனுக்கு தனி விமானம் கேட்டேனா? வதந்திக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி!
Recommended image2
ஆர்சிபி விற்பனையில் திடீர் ட்விஸ்ட்.. திடீரென களத்தில் குதித்த இந்திய கார்ப்பரேட் ஜாம்பவான்!
Recommended image3
World Cup 2027: IPL-ல் சொதப்பினா டீம்ல இடமில்லை..! வாழ்வா, சாவா நிலையில் 20 வீரர்கள்..
Related Stories
Recommended image1
T20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் நீக்கம்?.. நிரந்தர இடம் பிடிக்கும் இளம் அதிரடி வீரர்!
Recommended image2
டி20 உலகக்கோப்பை IND vs USA.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. சிக்சர் மன்னனுக்கு இடம்.. இந்தியா பிளேயிங் லெவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved