2023 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு இடமில்லை..?
2023 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் கேஎல் ராகுலுக்கு இடம் கிடைக்காது என்று முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் கருத்து கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய 2 பெரிய ஐசிசி டி20 தொடர்களில் தோற்ற இந்திய அணி, இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதற்காக தீவிரமாக தயாராகிறது. ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமான அணுகுமுறையை கையாளும் வகையில் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டுவருகிறது இந்திய அணி.
ஒருநாள் உலக கோப்பைக்காக 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்துள்ளது பிசிசிஐ. அந்த வீரர்கள் மட்டுமே சுழற்சி முறையில் இந்த ஆண்டு நடக்கும் ஒருநாள் போட்டிகளில் ஆடுவார்கள். இந்த ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட வீரர்களில் ஷிகர் தவான் இருக்கமாட்டார். ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இஷான் கிஷன் தான் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்குவார். எனவே தவானுக்கு அணியில் இடம் இருக்காது.
இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டன் ஹர்திக் பாண்டியா..? இர்ஃபான் பதான் கடும் எச்சரிக்கை
கேஎல் ராகுல் ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் ஆடுகிறார். ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் மிடில் ஆர்டரில் ஆடுவார்கள். ஓபனிங் ஸ்லாட்டை இஷான் கிஷன் பிடித்துவிட்டதால் ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ராகுலுக்கு இடம் கிடைக்காது என்று முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சஞ்சய் பங்கார், இஷான் கிஷன் தான் ரோஹித்துடன் ஓபனிங்கில் இறங்குவார். எனவே கேஎல் ராகுல் ஆடும் லெவனில் இடம்பிடிக்க கடுமையாக போராட வேண்டும். ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ராகுலுக்கு இடம் கிடைக்காது என்று நினைக்கிறேன். கேப்டன்சியை பொறுத்தமட்டில் ரோஹித்துக்கு அடுத்து ஹர்திக் பாண்டியாவிற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. கேப்டன்சிக்கான போட்டியில் முதலில் உள்ளார் ஹர்திக் பாண்டியா என்று சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.