ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா!
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சானியா மிர்சா - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஐபிஎல் ஆண்கள் அணியைப் போன்று மகளிருக்கும் ஐபிஎல் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. மகளிர் பிரீமியர் லீக் என்ற பெயரில் வரும் மார்ச் மாதம் இந்த ஆண்டின் முதல் சீசன் ஆரம்பமாகிறது. மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயிண்ட்ஸ், யுபி வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் என்று மொத்தம் 5 மணிகள் களமிறங்குகின்றன. ஒவ்வொரு அணியிலும் இடம் பெறும் வீராங்கனைகளுக்கான ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
சானியா மிர்சா - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இந்த ஏலத்தில் ஸ்மிரிதி மந்தனா ரூ.3.4 கோடி என்ற அதிகபட்ச தொகைக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டார். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னெர் மற்றும் இங்கிலாந்து ஆல்ரவுடண்டர் சைவர் பிரண்ட் ஆகிய இருவரும் தலா ரூ.3.2 கோடிக்கு விலை போனார்கள். ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனை எலைஸ் பெர்ரி, இந்திய வீராங்கனைகள் ரிச்சா கோஷ், ரேணுகா சிங் ஆகியோரையும் ஆர்சிபி அணி வாங்கியது.
சானியா மிர்சா - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஆர்சிபி அணி:
ஸ்மிரிதி மந்தனா, சோஃபி டிவைன், எலைஸ் பெர்ரி, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், எரின் பர்ன்ஸ், திஷா கசட், இந்திரானி ராய், ஷ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, ஆஷா ஷோபனா, ஹீத்தர் நைட், டேன் வான் நியெகெரிக், ப்ரீத்தி போஸ், பூனம் கெம்னார், கோமல் ஸன்ஸாத், மேகான் ஸ்கட், சஹானா பவார்.
சானியா மிர்சா - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இந்த நிலையில், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கிரிக்கெட்டில் களமிறங்குகிறார். அதுவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசராக களமிறங்குகிறார். இது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கூறியிருப்பதாவது: ஆர்சிபி மகளிர் அணியின் ஆலோசகராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை வரவேற்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.
சானியா மிர்சா - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
சானியா மிர்சாவின் கடின உழைப்பு, விளையாட்டின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் ஆகியவற்றின் மூலம் அவர் பல வெற்றிகளை கொண்டு பெண்களுக்கு முன் மாதிரியாக விளங்குகிறார். அவரால் எங்களது அணியை ஊக்குவிக்க முடியும். இக்கட்டான சூழ்நிலையில் அழுத்தத்தைக் கையாள்வது எப்படி என்பது குறித்து நன்கு அறிந்தவர்
சானியா மிர்சா - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
அவரது அனுபவம் கண்டிப்பாக அணிக்கு உதவியாக இருக்கும். சானியா மிர்சாவின் தைரியமான ஆளுமை எங்களது அணியை மாற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.