நான் பார்த்தவரையில் அவரு ரொம்ப ஸ்மார்ட்டான மூளைக்காரர், கடின உழைப்பாளி..! இந்திய வீரருக்கு சச்சின் புகழாரம்

First Published Dec 17, 2020, 10:29 PM IST

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனும், ஆஸி.,க்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தவுள்ளவருமான ரஹானேவை சச்சின் டெண்டுல்கர் ஸ்மார்ட்டான மூளைக்காரர் என புகழ்ந்துள்ளார்.
 

<p>இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், இந்த போட்டியில் ஆடிவிட்டு, கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியாவிற்கு திரும்புகிறார் விராட் கோலி.</p>

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், இந்த போட்டியில் ஆடிவிட்டு, கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியாவிற்கு திரும்புகிறார் விராட் கோலி.

<p>அதனால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ரஹானே கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். ரஹானேவின் கேப்டன்சி மீதும், அவரது தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் விதத்தை பார்க்கவும் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ரஹானேவிற்கு கேப்டன்சி பொறுப்பு, பெரிய அழுத்தமாக இருக்காது என்று கவாஸ்கர் அவருக்கு ஆதரவாக பேசியிருந்தார்.</p>

அதனால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ரஹானே கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். ரஹானேவின் கேப்டன்சி மீதும், அவரது தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் விதத்தை பார்க்கவும் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ரஹானேவிற்கு கேப்டன்சி பொறுப்பு, பெரிய அழுத்தமாக இருக்காது என்று கவாஸ்கர் அவருக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

<p>இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரும் ரஹானேவை புகழ்ந்து பேசியுள்ளார். ரஹானே குறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், நான் ரஹானேவிடம் பேசிய வரையில், அவர் மிகச்சிறந்த, ஸ்மார்ட்டான மூளைக்காரர் என்பதை நான் அறிந்துகொண்டேன். ரஹானேவும் ஆக்ரோஷமானவர் தான்; ஆனால் கட்டுப்பாடான ஆக்ரோஷம் கொண்டவர். அவருடன் நான் செலவழித்த நேரங்கள் மற்றும் பேசியதன் அடிப்படையில், அவர் கடின உழைப்பாளி என்பதை நான் தெரிந்துகொண்டேன்.&nbsp;</p>

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரும் ரஹானேவை புகழ்ந்து பேசியுள்ளார். ரஹானே குறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், நான் ரஹானேவிடம் பேசிய வரையில், அவர் மிகச்சிறந்த, ஸ்மார்ட்டான மூளைக்காரர் என்பதை நான் அறிந்துகொண்டேன். ரஹானேவும் ஆக்ரோஷமானவர் தான்; ஆனால் கட்டுப்பாடான ஆக்ரோஷம் கொண்டவர். அவருடன் நான் செலவழித்த நேரங்கள் மற்றும் பேசியதன் அடிப்படையில், அவர் கடின உழைப்பாளி என்பதை நான் தெரிந்துகொண்டேன். 

<p>அவருக்கு எதுவுமே எளிதாக கிடைத்துவிடவில்லை. அவரது கடின உழைப்பு, நேர்மை, மற்றும் உண்மையான உழைப்பு ஆகியவை இருந்தாலே, வெற்றி தானாக தேடிவரும். இந்திய அணி சிறப்பான முறையில் தயாராகியிருக்கும் என நம்புகிறேன். எனினும் வெற்றி பெற வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தாமல், பிராசஸில் கவனம் செலுத்தினால் வெற்றி தானாக வரும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.</p>

அவருக்கு எதுவுமே எளிதாக கிடைத்துவிடவில்லை. அவரது கடின உழைப்பு, நேர்மை, மற்றும் உண்மையான உழைப்பு ஆகியவை இருந்தாலே, வெற்றி தானாக தேடிவரும். இந்திய அணி சிறப்பான முறையில் தயாராகியிருக்கும் என நம்புகிறேன். எனினும் வெற்றி பெற வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தாமல், பிராசஸில் கவனம் செலுத்தினால் வெற்றி தானாக வரும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?