Sachin:கிரிக்கெட்டின் கடவுள்: முரளி விஜய்க்கு ஸ்டாண்டிங் ஓவேசன் கொடுக்கும் வரையில் மைதானத்திற்கு வராத சச்சின்!
Sachin Tendulkar and Murali Vijay: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் 167 ரன்கள் எடுத்த போது, ரசிகர்கள் அவருக்கு ஸ்டாண்டிங் ஓவேசன் கொடுக்கும் வரை சச்சின் டெண்டுல்கர் மைதானத்திற்குள் வரவில்லை.
Murali Vijay and Sachin Tendulkar
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் முரளி விஜய் 167 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்குரிய பாராட்டு கிடைக்கும் வரையில் அதாவது, ரசிகர்கள் அவருக்கு ஸ்டாண்டிங் ஓவேசன் கொடுக்கும் வரையில் சச்சின் பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் வரவில்லை. இதனை இப்போது கேட்கும் போதும் சரி, படிக்கும் போதும் சரி உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.
Sachin Tendulkar and Murali Vijay
இது குறித்து விளக்கமாக பார்க்கலாம். மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட்டின் கடவுள் என்றெல்லாம் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் விளையாடியிருக்கிறார். இதில் அதிக ரன்கள் குவித்த வீரர், முதல் முறையாக இரட்டை சதம் அடித்த வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்று பல சாதனைகளை சச்சின் டெண்டுல்கர் படைத்திருக்கிறார்.
Murali Vijay and Sachin Tendulkar, IND vs AUS Test
200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், 15,921 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 248* ரன்கள் எடுத்திருக்கிறார். இதில், 51 சதங்கள், 68 அரைசதங்கள் அடங்கும். மேலும், 46 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். இந்த நிலையில் தான் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.
Murali Vijay and Sachin Tendulkar, IND vs AUS 2nd Test 2013
இதில், 2ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 237/9 ரன்கள் குவித்தது. பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது. முரளி விஜய் மற்றும் வீரேந்திர சேவாக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடினர். சேவாக் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு சட்டேஷ்வர் புஜாரா களமிறங்கினார்.
Sachin Tendulkar and Murali Vijay
புஜாரா மற்றும் விஜய் இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டிற்கு 370 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். இதில் முரளி விஜய் 361 பந்துகளில் 23 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 167 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் எடுத்துக் கொடுத்த முரளி விஜய்க்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், அவரை கொண்டாடும் வகையிலும் அவர் மைதானத்தை விட்டு வெளியேறும் வரையில் அடுத்ததாக சச்சின் டெண்டுல்கர் மைதானத்திற்குள் பேட்டிங் செய்ய வரவில்லை.
பவுண்டரி லைனை தாண்டிச் சென்ற பிறகு தான் சச்சின் பவுண்டரி லைனுக்குள் தனது காலடியை எடுத்து வைத்தார். இப்போது சொல்லுங்கள், கிரிக்கெட்டின் கடவுள் என்று சச்சினை அழைப்பது சரியா? தவறா? அவரை கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைப்பது தான் சரி. இந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது.