MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: சாதனை பட்டியலில் 2ஆவது இடம் பிடித்த ரோகித் சர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: சாதனை பட்டியலில் 2ஆவது இடம் பிடித்த ரோகித் சர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 10 2023, 09:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
4 டெஸ்ட்

4 டெஸ்ட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
 

26
ஆஸ்திரேலியா 177 ரன்கள்

ஆஸ்திரேலியா 177 ரன்கள்

டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கி 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஆஸ்திரேலியாவின் லபுசேஞ்ச் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

36
ரோகித் சர்மா

ரோகித் சர்மா

இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கினர். ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் அடித்து 12 ரன்கள் விளாசினார். தொடர்ந்து பவுண்டரி விளாசிய ரோகித் சர்மா 66 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில், 8 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். 
 

46
ரோகித் சர்மா சாதனை

ரோகித் சர்மா சாதனை

இது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மார்க் வாக் கூறுகையில், ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவிடமிருந்து போட்டியை கவர்ந்து சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார். சொந்த மண்ணில் அதிக சராசரி வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா 2ஆவது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 98.2 சராசரி வைத்திருக்கிறார். ரோகித் சர்மா 74.7 சராசரியுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார்.

56
டெஸ்ட்டில் 57.42 சராசரி

டெஸ்ட்டில் 57.42 சராசரி

தொடக்க வீரராக ரோகித் சர்மா டெஸ்ட்டில் 57.42 சராசரி வைத்திருக்கிறார். ரோகித் சர்மா டெஸ்ட் என்று ஆடாமல் ஒரு நாள் போட்டி என்று ஆடி இந்திய அணிக்கு அதிக ரன்கள் சேர்த்து கொடுத்தால் அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கேஎல் ராகுலுக்குப் பதிலாக சுப்மன் கில்லை அணியில் இடம் பெறச் செய்திருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

66
ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின்

கேஎல் ராகுல் 71 பந்துகளில் ஒரேயொரு பவுண்டரி மட்டும் அடித்து 20 மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், ஒரு சுழற்பந்துவீச்சாளராக ஏற்கனவே 3 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 20 பந்துகளில் 2 பவுண்டரிகள் உள்பட 10 ரன்கள் குவித்து ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பௌலராக அவர் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். அப்படியிருக்கும் போது ஒரு பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் என்ன செய்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரோகித் சர்மா

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்திய அணியில் சஞ்சு சாம்சன் கம்பேக்.. பயிற்சியாளர் 'க்ரீன் சிக்னல்'.. 3 அதிரடி மாற்றங்கள்!
Recommended image2
ஹாரி ப்ரூக் ருத்ரதாண்டவம்.. மேஜிக் இன்னிங்ஸ்.. பாகிஸ்தானை பந்தாடி செமி பைனல் சென்ற இங்கிலாந்து!
Recommended image3
ஏற்கனவே 3 டக் அவுட் – அபிஷேக் சர்மாவிற்கு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுக்க காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved