- Home
- Sports
- Sports Cricket
- கங்குலியின் சாதனையை தவிடுபொடியாக்கிய ஹிட்மேன்.. அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் ரோகித்
கங்குலியின் சாதனையை தவிடுபொடியாக்கிய ஹிட்மேன்.. அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் ரோகித்
அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா சாதனைகளை முறியடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் சவுரவ் கங்குலியை முந்தி, இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் ஆனார்.

வரலாறு படைத்த ரோஹித் சர்மா
இந்தியாவின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா மற்றொரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளார். அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் 46 ரன்கள் எடுத்தபோது கங்குலியின் சாதனையை முறியடித்தார்.
சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா
ஆடம் ஜாம்பா பந்துவீச்சில் பவுண்டரி அடித்து 11,221 ரன்கள் என்ற மைல்கல்லை ரோஹித் கடந்தார். கங்குலி 308 போட்டிகளில் 11,221 ரன்கள் எடுத்திருந்தார். ரோஹித் 275 போட்டிகளில் 11,225 ரன்களை எட்டியுள்ளார்.
மூன்று இந்திய ஜாம்பவான்கள் பட்டியலில் ரோஹித்
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவருக்கு முன்னால் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி மட்டுமே உள்ளனர்.
- சச்சின் - 18,426
- கோலி - 14,181*
- ரோஹித் - 11,225*
- கங்குலி - 11,221
- டிராவிட் - 10,768
ஆஸ்திரேலியாவில் மற்றொரு வரலாற்று மைல்கல்லை எட்டிய ரோஹித்
இப்போட்டியில், ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற வரலாற்று சாதனையை ரோஹித் படைத்தார். இப்பட்டியலில் கோலி, சச்சின், தோனி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
ரோஹித்தின் மைல்கற்கல்
ஹிட்மேன் ரோஹித் சர்மா இதுவரை 275 ஒருநாள் போட்டிகளில் 48.62 சராசரியுடன் 11,225* ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள், 59 அரைசதங்கள் மற்றும் மூன்று இரட்டை சதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 264 ஆகும்.