MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • எந்த கிரிக்கெட்டரும் செய்யாத சாதனையை படைத்த ஹிட்மேன் – ஒரே மைதானத்தில் 100 சிக்ஸ்!

எந்த கிரிக்கெட்டரும் செய்யாத சாதனையை படைத்த ஹிட்மேன் – ஒரே மைதானத்தில் 100 சிக்ஸ்!

டி20 கிரிக்கெட்டில் ஒரே மைதானத்தில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 12 2024, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Rohit Sharma, IPL 2024

Rohit Sharma, IPL 2024

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 25ஆவது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
Mumbai Indians, IPL 2024

Mumbai Indians, IPL 2024

அதிகபட்சமாக கேப்டன் பாப் டூ ப்ளெசிஸ் 61 ரன்களும், தினேஷ் கார்த்திக் 53 ரன்களும், ரஜத் படிதார் 50 ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து 197 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

38
Rohit Sharma 100 T20 Sixes in Wankhede Stadium

Rohit Sharma 100 T20 Sixes in Wankhede Stadium

இதில், இஷான் கிஷான் தொடக்க முதலே அதிரடியாக விளையாடி 7 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 69 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா 24 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

48
Rohit Sharma, Mumbai Indians IPL 2024

Rohit Sharma, Mumbai Indians IPL 2024

இந்தப் போட்டியில் 3 சிக்ஸர் அடித்ததன் மூலமாக ஒரே மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 97 சிக்ஸர்கள் விளாசியிருந்த ரோகித் சர்மா நேற்றைய போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாக 100 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

58
Rohit Sharma 100 Sixes at Wankhede Stadium

Rohit Sharma 100 Sixes at Wankhede Stadium

கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த வீரரும் இது போன்ற ஒரு சாதனையை இந்த மைதானம் மட்டுமின்றி வேறு எந்த மைதானத்திலும் நிகழ்த்தியதில்லை. மேலும், ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸரும் விளாசியிருக்கிறார்.

68
MI, IPL 2024

MI, IPL 2024

இதில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 49 சிக்ஸர்கள் விளாசிய ஹிட்மேன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 38 சிக்ஸர்களும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 37 சிக்ஸர்களும் விளாசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

78
Mumbai Indians, Rohit Sharma

Mumbai Indians, Rohit Sharma

இந்த ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் 2ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது. ஆரம்பத்தில் விளையாடிய 3 போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திலிருந்தது.

88
Rohit Sharma

Rohit Sharma

டெல்லிக்கு எதிராக நடந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் வெற்றியோடு புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்திற்கு முன்னேறியது. கடைசியாக ஆர்சிபிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியைத் தொடர்ந்து வரும் 14 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தினேஷ் கார்த்திக்
ஹர்திக் பாண்டியா
இந்தியன் பிரீமியர் லீக்
இஷான் கிஷன்
ரோகித் சர்மா
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
Recommended image2
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!
Recommended image3
IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved