அவங்க 2 பேரையும் விட இவருதான் சிறந்த பேட்ஸ்மேன்..! உடனே டீம்ல சேருங்க.. இந்திய அணிக்கு பாண்டிங் அட்வைஸ்

First Published Dec 21, 2020, 8:23 PM IST

மயன்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரையும் விட ரோஹித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்றும் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று ஆஸி., முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
 

<p>இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பேட்டிங் தான் படுமோசமாக இருந்தது. 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது.&nbsp;</p>

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பேட்டிங் தான் படுமோசமாக இருந்தது. 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது. 

<p>குறிப்பாக தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவருமே நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க தவறிவிட்டனர். மயன்க் அகர்வாலாவது பரவாயில்லை; பிரித்வி ஷா 2 இன்னிங்ஸ்களிலும் சொல்லிவைத்தாற்போல ஒரே மாதிரி ஆட்டமிழந்தார். அவர் அவுட்டான விதம் அவரது பேட்டிங் டெக்னிக்கில் இருக்கும் பிரச்னையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியது.&nbsp;</p>

குறிப்பாக தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவருமே நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க தவறிவிட்டனர். மயன்க் அகர்வாலாவது பரவாயில்லை; பிரித்வி ஷா 2 இன்னிங்ஸ்களிலும் சொல்லிவைத்தாற்போல ஒரே மாதிரி ஆட்டமிழந்தார். அவர் அவுட்டான விதம் அவரது பேட்டிங் டெக்னிக்கில் இருக்கும் பிரச்னையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியது. 

<p>முதல் டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் ஆடிய விதம் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியில் சில மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. 2வது டெஸ்ட்டுக்கான தொடக்க ஜோடியில் கண்டிப்பாக மாற்றம் செய்யப்படும். ஆனால் ரோஹித் சர்மா தொடக்க வீரராக இறங்க முடியாது. காயத்திலிருந்து மீண்டு ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள ரோஹித், குவாரண்டினில் உள்ளார். எனவே அவர் 3வது டெஸ்ட்டில் தான் ஆடுவார்.</p>

முதல் டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் ஆடிய விதம் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியில் சில மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. 2வது டெஸ்ட்டுக்கான தொடக்க ஜோடியில் கண்டிப்பாக மாற்றம் செய்யப்படும். ஆனால் ரோஹித் சர்மா தொடக்க வீரராக இறங்க முடியாது. காயத்திலிருந்து மீண்டு ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள ரோஹித், குவாரண்டினில் உள்ளார். எனவே அவர் 3வது டெஸ்ட்டில் தான் ஆடுவார்.

<p>ஆனால் முடிந்தளவு அவரை 2வது போட்டியிலேயே ஆடவைக்க வேண்டும் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேனல் 7ல் பேசிய பாண்டிங், மயன்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரையும் விட ரோஹித் சர்மா மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். அவர் கண்டிப்பாக இந்த தொடரில் இந்திய அணியில் ஆடுவார். ஆனால் அவர் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில், அவரை 2வது போட்டியிலேயே ஆடவைக்க வேண்டும் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.</p>

ஆனால் முடிந்தளவு அவரை 2வது போட்டியிலேயே ஆடவைக்க வேண்டும் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேனல் 7ல் பேசிய பாண்டிங், மயன்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரையும் விட ரோஹித் சர்மா மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். அவர் கண்டிப்பாக இந்த தொடரில் இந்திய அணியில் ஆடுவார். ஆனால் அவர் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில், அவரை 2வது போட்டியிலேயே ஆடவைக்க வேண்டும் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?