#IPL2021 பெரிய பெரிய வீரர்களை எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் தூக்கிப்போட்ட ஆர்சிபி
ஐபிஎல் 14வது சீசனில் ஆரோன் ஃபின்ச், மோரிஸ் உள்ளிட்ட, ஆர்சிபி அணி நம்பி எடுத்த பெரிய வீரர்கள் சிலரை கழட்டிவிட்டுள்ளது.
ஐபிஎல்லில் 13 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய மிகப்பெரிய வீரர்களை அணியில் பெற்றிருந்தும் ஒரு முறை கூட ஆர்சிபி அணி கோப்பையை வென்றதில்லை. அதற்கு அந்த அணியின் கோர் டீம் வலுவாக அமையாததுதான் காரணம்.
கோர் டீம் வலுவாக அமையாததற்கு, வீரர்கள் மீது நம்பிக்கை தொடர் வாய்ப்பளித்து, உள்நாட்டு வீரர்களை உருவாக்கிவிடாமல், வீரர்களை எடுப்பதும் கழட்டிவிடுவதுமாகவே இருப்பதால் தான் அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆர்சிபி அணியால் கழட்டிவிடப்பட்ட பல வீரர்கள், வேறு அணியில் நன்றாக ஆடியுள்ளனர். ஷேன் வாட்சனை ஆர்சிபி சரியாக பயன்படுத்தவில்லை. மிகச்சிறந்த வீரரான வாட்சன் மீது நம்பிக்கை வைக்காமல், போதுமான வாய்ப்பளிக்காமலேயே ஆர்சிபி கழட்டிவிட்ட நிலையில், சிஎஸ்கேவில் ஆடும்போது, அந்த அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்து மேட்ச் வின்னராக ஜொலித்தார் வாட்சன்.
ஐபிஎல் 13வது சீசனில் ஆர்சிபி அணி கோர் டீமை கட்டமைப்பதாக கூறி, ஃபின்ச், கிறிஸ் மோரிஸ் ஆகிய சர்வதேச அளவில் பெரிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது. ஆனால் அடுத்த சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக அவர்களை கழட்டிவிட்டுள்ளது. ஐபிஎல் 14வது சீசனுக்கு முன் ஆர்சிபி அணி தக்கவைக்கும் மற்றும் கழட்டிவிடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆரோன் ஃபின்ச், கிறிஸ் மோரிஸ், மொயின் அலி, இசுரு உடானா, டேல் ஸ்டெய்ன் ஆகிய வெளிநாட்டு வீரர்களையும், பார்த்திவ் படேல், பவன் நேகி, உமேஷ் யாதவ், ஷிவம் துபே, குர்கீரத் சிங் மன் ஆகிய வீரர்களை கழட்டிவிட்டுள்ளது.
ஆர்சிபி கழட்டிவிட்ட வீரர்கள்:
ஆரோன் ஃபின்ச், கிறிஸ் மோரிஸ், மொயின் அலி, இசுரு உடானா, பார்த்திவ் படேல், ஷிவம் துபே, உமேஷ் யாதவ், பவன் நேகி, டேல் ஸ்டெய்ன், குர்கீரத் சிங் மன்.
ஆர்சிபி தக்கவைத்த வீரர்கள்:
விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், தேவ்தத் படிக்கல், நவ்தீப் சைனி, ஆடம் ஸாம்பா, ஷாபாஸ் அகமது, ஜோஷ் ஃபிலிப், கேன் ரிச்சர்ட்ஸன், பவன் தேஷ்பாண்டே.