MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathimynation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • பின்னி பெடலெடுத்த பில் சால்ட், விராட் கோலி – 16.2 ஓவர்களிலேயே கேகேஆரை அசால்ட்டா ஊதி தள்ளிய ஆர்சிபி!

பின்னி பெடலெடுத்த பில் சால்ட், விராட் கோலி – 16.2 ஓவர்களிலேயே கேகேஆரை அசால்ட்டா ஊதி தள்ளிய ஆர்சிபி!

KKR vs RCB IPL 2025 Match Results in Tamil : கேகேஆர் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 முதல் லீக் போட்டியில் ஆர்சிபி பில் சால்ட் மற்றும் விராட் கோலியின் அதிரடியால் 177 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

2 Min read
Rsiva kumar
Published : Mar 23 2025, 12:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
19
Asianet Image

ஐபிஎல் 2025 தொடக்க விழாவிற்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆர்சிபி பவிலிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது.

29
IPL 2025 Opening Ceremony, Eden Gardens, Kolkata, Kolkata Knight Riders

IPL 2025 Opening Ceremony, Eden Gardens, Kolkata, Kolkata Knight Riders

இதில், அதிகபட்சமாக கேப்டன் அஜிங்க்யா ரஹானே 56 ரன்கள் எடுத்தார். சுனில் நரைன் 44 ரன்கள் எடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் குர்ணல் பாண்டியா திருப்பு முனையை ஏற்படுத்தி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரது விக்கெட்டுகளை குருணல் பாண்டியா கைப்பற்றிவே போட்டியில் திருப்பு முனை ஏற்பட்டது. இதையடுத்து 175 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

39
Indian Premier League, Virat Kohli, Ajinkya Rahane, KKR vs RCB, IPL 2025

Indian Premier League, Virat Kohli, Ajinkya Rahane, KKR vs RCB, IPL 2025

தொடக்கம் முதலே பில் சால்ட் அதிரடியாக விளையாடினர். முதல் ஓவரில் 12, 3ஆவது ஓவரில் 20 ரன்கள் என்று அடுத்தடுத்து அதிரடியாக விளையாடவே முதல் 6 ஓவர்களில் ஆர்சிபி எளிதாக 80 ரன்கள் குவித்தது. ஐபிஎல் தொடரில் ஆர்சிபி குவித்த 2ஆவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த சீசனில் பவர்பிளேயில் 92/1 ரன்கள் எடுத்திருந்தது.

49
Rajat Patidar, Royal Challengers Bengaluru

Rajat Patidar, Royal Challengers Bengaluru

அதிரடி காட்டிய பில் சால்ட் இந்தப் போட்டியில் முதல் அரைசதம் அடித்த நிலையில் அவர் 31 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். ஆர்சிபி முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 104 ரன்கள் குவித்தது.

59
IPL 2025 KKR vs RCB Live Score, Krunal Pandya, KKR vs RCB Live Score

IPL 2025 KKR vs RCB Live Score, Krunal Pandya, KKR vs RCB Live Score

கேகேஆர் அணிக்கு எதிராக 1000 ரன்கள் கடந்து சாதனை:

இந்தப் போட்டியில் விராட் கோலி 38 ரன்கள் எடுத்திருந்த போது கேகேஆர் அணிக்கு எதிராக ஐபிஎல் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்தார். இதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 1000 ரன்களை கடந்துள்ளார். விராட் கோலி மட்டுமே இந்த சாதனையை இப்போது நிகழ்த்தியிருக்கிறார்

69
KKR vs RCB IPL Match, KKR  vs RCB Cricket Match Prediction

KKR vs RCB IPL Match, KKR vs RCB Cricket Match Prediction

தேவ்தத் படிக்கல் 10 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் தன் பங்கிற்கு அதிரடி காட்டினார். அவர், 16 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 34 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு புறம் அதிரடியாக விளையாடிய கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 56ஆவது அரைசதம் அடித்தார். அவர் 30 பந்துகளில் 50 ரன்கள் கடந்த நிலையில் கடைசியாக 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

79
KKR vs RCB Match Highlights, KKR vs RCB Match Results, Sunil Narine

KKR vs RCB Match Highlights, KKR vs RCB Match Results, Sunil Narine

இறுதியாக வந்த லியாம் லிவிங்ஸ்டன் அடுத்தடுத்து சிக்ஸரும், பவுண்டரியும் விளாசி அணியை வெற்றி பெற செய்தார். ஆர்சிபி 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலமாக 18ஆவது ஐபிஎல் 2025 தொடரை ஆர்சிபி வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. மேலும், ஒரு கேப்டனாக தனது அறிமுக போட்டியிலேயே அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.

89
KKR vs RCB Player of the Match, Indian Premier League

KKR vs RCB Player of the Match, Indian Premier League

இந்த சீசனில் டிராபி வென்று அதனை விராட் கோலிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று ரஜத் படிதார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணியில் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகள் கைப்பற்றிய குருணல் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வரும் 28ஆம் தேதி சென்னையில் நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

99
RCB Beat KKR By 7 Wickets Difference in IPL 2025 Opening Match at Eden Gardens

RCB Beat KKR By 7 Wickets Difference in IPL 2025 Opening Match at Eden Gardens

இதே போன்று நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் 6ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கவுகாத்தியில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Rsiva kumar
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஐபிஎல் 2025
கேகேஆர் vs ஆர்சிபி
விராட் கோலி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஐபிஎல் 2025 தொடக்க விழா
குருணல் பாண்டியா
அஜிங்க்யா ரஹானே
 
Recommended Stories
Top Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Andriod_icon
  • IOS_icon
  • About Us
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved