- Home
- Sports
- Sports Cricket
- IPL 2023: காயம் சரியாகுற மாதிரி தெரியல.. ஐபிஎல் 16வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய ஆர்சிபி வீரர்..!
IPL 2023: காயம் சரியாகுற மாதிரி தெரியல.. ஐபிஎல் 16வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய ஆர்சிபி வீரர்..!
காயம் காரணமாக ஐபிஎல் 16வது சீசனிலிருந்து முழுமையாக விலகியுள்ளார் ஆர்சிபி வீரர் ரஜத் பட்டிதார்.

ஐபிஎல்லில் 15 சீசன்களில் ஒரு முறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
இந்த சீசனில் வெற்றி பெற்றாக வேண்டிய வேட்கையில் ஆர்சிபி இருக்கும் நிலையில், ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக முதல் பாதி சீசனிலிருந்து விலகினார். ரஜத் பட்டிதாரும் முதல் பாதி சீசனிலிருந்து விலகியிருந்தார்.
ரஜத் பட்டிதார் ஆர்சிபி அணியின் டாப் ஆர்டரில் முக்கியமான பேட்ஸ்மேன் என்றாலும், அவர் இல்லாமலேயே ஆர்சிபி அணி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
விராட் கோலி மற்றும் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஆகிய இருவரும் வெறித்தனமாக பேட்டிங் ஆடி மும்பை இந்தியன்ஸை அடித்து நொறுக்கி ஆர்சிபிக்கு அபார வெற்றியை பெற்று கொடுத்தனர்.
ரஜத் பட்டிதார் பாதி சீசனுக்கு மேல் வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கால் காயத்தால் அவர் ஐபிஎல் 16வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். ரஜத் பட்டிதார் ஐபிஎல்லில் 12 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அதில் 11 இன்னிங்ஸ்களில் பேட்டிங் ஆடி ஒரு சதத்துடன் 404 ரன்கள் அடித்துள்ளார்.