- Home
- Sports
- Sports Cricket
- சச்சின், தோனி வரிசையில் இடம் பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின் – டெல்லியில் பத்ம ஸ்ரீ விருது பெற்றார்!
சச்சின், தோனி வரிசையில் இடம் பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின் – டெல்லியில் பத்ம ஸ்ரீ விருது பெற்றார்!
Ravichandran Ashwin Padma Shri Awards : விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Ravichandran Ashwin Padma Shri Awards : ஒவ்வொரு ஆண்டும் கலை, சமூக பணி, பொது விவகாரங்கள், அரசியல், பொறியியல், வர்த்தகம், தொழில், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு என்று பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசால் நாட்டின் மிக உயரிய சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் ஆகிய பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
விதிவிலக்கான மற்றும் சிறந்த சேவைக்காக ‘பத்ம விபூஷண் விருதும், உயர் மட்டத்தில் சிறந்த சேவைக்காக ‘பத்ம பூஷண் விருதும், எந்தவொரு துறையிலும் சிறந்த சேவைக்காக ‘பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்
இதில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இதே போன்று இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் பி ஆருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தற்போது விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ஜெய் ஷா ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ
இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டி ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் அஸ்வின் பத்ம ஸ்ரீ விருது பெற்றார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், எம் எஸ் தோனி, குண்டப்பா விஸ்வநாத், மிதாலி ராஜ், முகமது அசாருதீன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களது வரிசையில் இப்போது ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம் பிடித்துள்ளார்.
139 பேருக்கு பத்ம விருதுகள்
இந்த ஆண்டு மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டைத் தொடர்ந்து ஹாக்கியில் சிறந்து விளங்கிய கேரளாவைச் சேர்ந்த பிஆர் ஸ்ரீஜேஷூக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோல் கீப்பரான பி ஆர் ஸ்ரீஜேஷூக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஜேஷ்
தற்போது இந்திய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஸ்ரீஜேஷ் பணியாற்றி வருகிறார். கடந்த 1956ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்ற மேஜர் தயான் சந்திற்கு பிறகு பத்ம பூஷண் விருது பெற்ற 2ஆவது ஹாக்கி வீரராக இந்த பெருமையை பெற்றுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெணகலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்த அணியில் ஸ்ரீஜேஷ் ஒரு பகுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீஜேஷ் 336 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.