எம்.எஸ். தோனி ஆபத்தான பேட்ஸ்மேன் – அவரை உஷாரா டீல் பண்ணனும் – பாக்., பயிற்சியாளரிடம் புகாரளித்த ராவ் இப்திகார்
MS Dhoni, India vs Pakistan: 2005 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக், தோனியின் ஆட்டத்தைப் பற்றி பயிற்சியாளரிடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். தோனியை கவனமாக கையாள வேண்டும் என்று அவர் கூறியதாகவும், அடுத்த போட்டியிலேயே தோனி சதம் விளாசி அசத்தியதாகவும் மிஸ்பா தெரிவித்துள்ளார்.
IND vs PAK, MS Dhoni
2004 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி அறிமுகமானார். தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை டக் அவுட் மற்றும் ரன் அவுட் மூலமாக தொடங்கினார். அதன் பிறகு அரைசதம் மற்றும் ரன் அவுட்டுடன் முடித்தார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் தோனி 297 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் தான் தற்போது தோனி பற்றி பாகிஸ்தான் வீரர் புகார் அளித்த செய்தி ஒன்று தலைப்புச் செய்தியாக வைரலாகி வருகிறது அதாவது தோனியை ஒரு மாஸ் பேட்ஸ்மேனாக நிலைநிறுத்திய கதை தான் அது. ஒரு கட்டத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் சர்வதேச போட்டிகளில் எல்லாம் விளையாடி வந்தது. அப்போது தான் இந்த சம்பவம் நடைபெற்றது.
MS Dhoni, IND vs PAK ODI Series
2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோடை காலம். அப்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. பாகிஸ்தான் டீமுக்கு இன்சமாம் உல் ஹக் கேப்டனாக இருந்தார். இந்திய அணிக்கு கொல்கத்தா தாதா என்று சொல்லப்படும் சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்தார்.
அதுவரையில் தோனி பெரிதாக ஒரு போட்டியில் கூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் கூட தோனி 7ஆவது வரிசையில் களமிறக்கப்பட்டார். தோனி மீது நம்பிக்கை கொண்ட கங்குலி அவருக்கு தனது இடமான 3ஆவது இடத்தில் களமிறங்கும் ஒரு வாய்ப்பை கொடுத்தார். முதல் போட்டியில் சதம் விளாசிய வீரேந்திர சேவாக் உடன் 2ஆவது ஒருநாள் போட்டியில் இணைந்து விளையாடினார்.
MS Dhoni, IND vs PAK
வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் சச்சின் 2 ரன்னில் ரன் அவுட்டாக தோனி வந்தார். சேவாக் மற்றும் தோனி இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். சேவாக் 74 ரன்களில் ஆட்டமிழந்தனர். சேவாக் மற்றும் தோனி ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்துக் கொடுத்தனர். அடுத்து வந்த கேப்டன் கங்குலி 9 ரன்களில் நடையை கட்டினார்.
அதன் பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட தோனி சதம் விளாசி சாதனை படைத்தார். 123 பந்துகளில் 15 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 148 ரன்கள் எடுத்து 4ஆவது வீரராக ஆட்டமிழந்தார். இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் தி பெவிலியன் என்ற டாக் ஷோவில் ராவ் இப்திகார், பாகிஸ்தான் பயிற்சியாளரிடம் தோனி குறித்து புகார் அளித்தார். அதாவது, தோனி மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன், அவரை கவனமாக டீல் பண்ண வேண்டும் என்று கூறியதாக பகிர்ந்து கொண்டார். ஆனால், அடுத்த போட்டியிலேயே தோனி சதம் விளாசினார்.
MS Dhoni ODI Records
பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் குவித்தது. இதில் சேவாக் 74 ரன்கள், தோனி 148 ரன்கள், ராகுல் டிராவிட் 52 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 298 ரன்கள் குவித்தது. இதில் அப்துல் ரசாக் 88 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றார். ஒரு கேப்டனாக 3 ஐசிசி டிராபிகளை இந்திய அணிக்காக தோனி வென்று கொடுத்தார். 2007 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் 200 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த தோனி 110 ஒருநாள் போட்டிகளில் வெற்றியும், 74 போட்டிகளில் தோல்வியும் பெற்று கொடுத்துளார். 5 போட்டி டையில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று 2007 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச டி20 போட்டிக்கு கேப்டனாக இருந்த் தோனி 72 டி20 போட்டிகளில் 41 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். டி20 போட்டிகளில் தோனியின் வெற்றி சதவிகிதம் 56.90 ஆகும்.
MS Dhoni vs Pakistan
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டும் இடம் பெற்று விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி டிராபிகளை வென்று கொடுத்துள்ளார். இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனி 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார்.