- Home
- Sports
- Sports Cricket
- ஜெய்ஸ்வாலின் அதிரடியால் 173 ரன்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் – ஏமாற்றிய கேப்டன் சஞ்சு சாம்சன்!
ஜெய்ஸ்வாலின் அதிரடியால் 173 ரன்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் – ஏமாற்றிய கேப்டன் சஞ்சு சாம்சன்!
Yashasvi Jaiswal, RR vs RCB : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆர்சிபிக்கு எதிராக முதலில் பேட் செய்து 173 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வாலின் அரைசதம் மற்றும் துருவ் ஜூரேலின் ஆட்டமிழக்காத இன்னிங்ஸ் அணிக்கு உதவியது.

ஐபிஎல் 2025
Yashasvi Jaiswal, RR vs RCB : ஐபிஎல் 2025 தொடரில் தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் 28ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பவுலிங் தேர்வு செய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 173 ரன்கள்
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், கேப்டன் சாம்சன் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்கவே ஜெய்ஸ்வால் உடன் ரியான் பராக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் குவித்தது. பராக் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஜெய்ஸ்வால் 75 ரன்கள்
அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பராக் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய துருவ் ஜூரேல் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். துருவ் ஜூரேல் 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் உட்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆர்சிபி அபார பந்துவீச்சு:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் ராஜஸ்தானுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசினர். ஆர்சிபி சார்பில் குர்ணல் பாண்டியா, யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சுயாஷ் சர்மா 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து சற்று அதிகமாக ரன்களை வழங்கினார்.
இதையடுத்து 174 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஆர்சிபி விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. அந்த 2 போட்டியும் ஹோம் மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. மற்ற 3 போட்டிகளையும் அவே மைதானத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.