பஞ்சாப் கிங்ஸை ஆட்டி வைத்த தமிழன் – சாய் கிஷோர், ரஷீத் கான் சூழலில் 142 ரன்களில் சுருண்ட பஞ்சாப்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 37ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Punjab Kings vs Gujarat Titans, 37th IPL 2024 Match
பஞ்சாப் மாநிலம் மொகாலி அருகிலுள்ள முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 37ஆவது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, கேப்டன் சாம் கரண் மற்றும் பிராப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Punjab Kings vs Gujarat Titans, 37th IPL 2024 Match
இதில் பிராப்சிம்ரன் சிங் 35 ரன்களில் மோகித் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிலீ ரோஸோவ் 9 ரன்களில் நூர் அகமது பந்தில் நடையை கட்டினார். கேப்டன் சாம் கரண் 20 ரன்களில் ரஷீத் கான் பந்தில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 6 ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
Punjab Kings vs Gujarat Titans, 37th IPL 2024 Match
பஞ்சாப் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹர்ப்ரீத் சிங் 14 ரன்னிலும், ஹர்ப்ரீத் பிரார் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக ஹர்ஷல் படேல் 0 ரன்னில் வெளியேற, ரபாடா 1 ரன் எடுத்தார். இதன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது.
Punjab Kings vs Gujarat Titans, 37th IPL 2024 Match
குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் சாய் கிஷோர் 4 விக்கெட்டும் மோகித் சர்மா மற்றும் நூர் அகமது தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ரஷீத் கான் ஒரு விக்கெட் எடுத்தார்.