#AUSvsIND இந்திய அணியின் அடுத்த லட்சுமணன் இந்த பையன் தான்..!
First Published Dec 14, 2020, 10:03 PM IST
தற்போதைய இந்திய அணியின் விவிஎஸ் லட்சுமணன், ஹனுமா விஹாரி என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி தொடங்கவுள்ளது. அடிலெய்டில் நடக்கும் அந்த போட்டி பகலிரவு போட்டியாக நடக்கவுள்ளது. கேப்டன் விராட் கோலி, கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாத நிலையில், புஜாரா, ஹனுமா விஹாரி ஆகிய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் மீதான பொறுப்பு அதிகமாகவுள்ளது.

இந்நிலையில், தற்போதைய இந்திய அணியின் லட்சுமணன், ஹனுமா விஹாரி என்று பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஓஜா, ஹனுமா விஹாரி ஐபிஎல்லில் ஆடவில்லை; சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் ஆடவில்லை. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரராகத்தான் இருக்கிறார். அதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக ஆடினால், குறிப்பாக வெளிநாடுகளில் நன்றாக ஆடினால், நல்ல மரியாதை கிடைக்கும்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?