T20 World Cup 2024 Trophy: பும்ராவின் மகனை தூக்கி வச்சு கொஞ்சிய பிரதமர் மோடி – வைரலாகும் குடும்ப புகைப்படம்!
டி20 உலகக் கோப்பை டிராபியோடு பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றதைத் தொடர்ந்து ஜஸ்ப்ரித் பும்ரா தனது குடும்பத்தோடு மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
T20 World Cup Winning Team Meet PM Modi
பார்படாஸில் தாக்கத்தை ஏற்படுத்திய பெரில் சூறாவளி அச்சுறுத்தலை கடந்து 4 நாட்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை டிராபியோடு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
T20 World Cup Winning Team Meet PM Modi
பிசிசிஐ செயலாளர் பூங்கொத்து கொடுத்து ரோகித் சர்மாவை வரவேற்றார். இதையடுத்து பிசிசிஐ தலைவர் ரோஜர் பென்னி, ஜெய் ஷா மற்றும் ரோகித் சர்மா இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
T20 World Cup Winning Team Meet PM Modi
இதையடுத்து அங்கிருந்து ஹோட்டலுக்கு சென்ற இந்திய அணி வீரர்களுக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹோட்டல் வந்த ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உற்சாகமாக டான்ஸ் ஆடிய வீடியோ வைரலானது. அதன் பிறகு சாம்பியன்ஸ் ஜெர்சி அணிந்து கொண்டு பிரதமர் மோடியை சந்திப்பதற்கு அவரது இல்லத்திற்கு சென்றனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் முதலில் டிராபியோடு அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.
T20 World Cup Winning Team Meet PM Modi
அந்த வீடியோவில் பிரதமர் மோடி டிராபியை கையில் வாங்கவில்லை. மேலும், ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் டிராபியை பிடித்திருந்த நிலையில் இருவரது கையையும் பற்றியவாறு பிரதமர் மோடி போஸ் கொடுத்திருந்தார்.
T20 World Cup Winning Team Meet PM Modi
இதைத் தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினார். மிகவும் ஜாலியாக சென்ற இந்த கலந்துரையாடலில் ஒவ்வொருவரிடமும் பிரதமர் மோடி பேசியுள்ளார். அதன் பிறகு அவருடன் விருந்து அருந்திய இந்திய அணி வீரர்கள் அங்கிருந்து மும்பை விமானம் நிலையம் சென்றனர்.
T20 World Cup Winning Team Meet PM Modi
இதற்கிடையில் பிரதமர் மோடியுடன் தனது மனைவி சஞ்சனா கணேசன் மற்றும் மகன் அங்கத் ஆகியோருடன் இணைந்து பும்ரா புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது மோடி தனது கையில் பும்ராவின் மகன் அங்கத்தை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
T20 World Cup Winning Team Meet PM Modi
இதே போன்று வேகப்பந்து வீச்சாலர் அர்ஷ்தீப் சிங் தனது பெற்றோருடன் இணைந்து மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். விராட் கோலியும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இணைந்து நமோ என்று அச்சிடப்பட்ட சாம்பியன் ஜெர்சியை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்துள்ளனர்.
T20 World Cup Winning Team Meet PM Modi
டெல்லியிலிருந்து விமானம் மூலமாக மும்பை செல்லும் இந்திய அணி வீரர்கள் மாலை 5 மணிக்கு வெற்றி பேரணி நடத்துகின்றனர். மரைன் டிரைவ் முதல் வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக செல்கின்றனர். இந்திய அணி வீரர்களின் ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் பேருந்தும் தயார் நிலையில் உள்ளது.
Indian Players Meet PM Modi
கடைசியாக இரவு 7 மணிக்கு வான்கடே மைதானத்தில் வெற்றி கொண்டாட்டமும், பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது. இதற்காக வான்கடே மைதானத்திற்கு வருகை தரும் ரசிகர்களுக்கு இலவச அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு முதலில் வரும் ரசிகர்களுக்கு முன்னுரிமை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.