#ENGvsNZ 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து..!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 1-0 என தொடரை வென்றது.
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில், ரோரி பர்ன்ஸ்(81) மற்றும் டேனியல் லாரன்ஸ்(81) ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் 303 ரன்கள் அடித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியில் கான்வே(80), வில் யங்(82) மற்றும் ரோஸ் டெய்லர்(80) ஆகிய மூவரின் அபாரமான பேட்டிங்கால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 388 ரன்களை குவித்தது.
85 ரன்கள் பின் தங்கிய 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 122 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 3ம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் அடித்திருந்த நிலையில், 4ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஸ்டூவர்ட் பிராடின் விக்கெட்டை டிரெண்ட் போல்ட் வீழ்த்த 122 ரன்களுக்கே இங்கிலாந்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து வெறும் 38 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 1-0 என டெஸ்ட் தொடரை வென்றது.