#NZvsAUS முதல் டி20: ஆஸி., மற்றும் நியூசி., அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டிக்கான உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஆஸ்திரேலிய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நாளை காலை இந்திய நேரப்படி 11.30 மணிக்கு தொடங்குகிறது.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் களமிறங்கும் உத்தேச ஆடும் லெவன்:
மார்டின் கப்டில், டிம் சேஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), டெவான் கான்வே, க்ளென் ஃபிலிப்ஸ், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், கைல் ஜாமிசன், டிம் சௌதி, ஹாமிஷ் பென்னெட்/இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்.
ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் உத்தேச ஆடும் லெவன்:
ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஃபிலிப், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் மார்ஷ்/அஷ்டன் டர்னர், அஷ்டன் அகர், ஜெய் ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா, ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப்.