Musheer Khan Accident: துலீப் டிராபியில் 181 ரன்கள் குவித்த முஷீர் கானுக்கு சாலை விபத்தில் எலும்பு முறிவு!
Musheer Khan Road Accident: துலீப் டிராபியில் அறிமுக சதம் விளாசிய முஷீர் கான் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் 3-6 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது. இதனால் இரானி கோப்பை மற்றும் ரஞ்சி டிராபி தொடர்களில் இருந்தும் அவர் விலக நேரிடும்.
முஷீர் கான் விபத்து
துலீப் டிராபி 2024 தொடரில் தனது அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி சாதனை படைத்த முஷீர் கானுக்கு சாலை விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இரானி டிராபி 2024 தொடர் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அந்த தொடரில் இடம் பெற்றுள்ள மும்பையின் இளம் பேட்ஸ்மேன் முஷீர் கான் சாலை விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சர்ஃபராஸ் கானின் சகோதரர் முஷீர் கான் தனது தந்தையும் பயிற்சியாளருமான நௌஷாத்துடன் கான்பூரிலிருந்து லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Musheer Khan, Sarfaraz Khan, duleep trophy 2024
இதில் முஷீர் கானின் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரையில் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதுவரை இந்த விபத்துக்கான காரணம் தெளிவாக கூறப்படவில்லை என்றாலும் கார் 4 முதல் 5 முறை சாலையில் கவிழ்ந்துள்ளது. இதன் விளைவாக முஷீர் கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
Musheer Khan
துலீப் டிராபி தொடரில் இந்தியா பி அணிக்கு எதிராக விளையாடிய முஷீர் கான் 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், 4 இன்னிங்ஸ்களில் 2 முறை டக் அவுட்டானார். 19 வயதான முஷீர் கான் 15 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள், ஒரு அரைசதம் உள்பட 716 ரன்கள் எடுத்தார். வரும் அக்டோபர் 1 ஆம் தேதி பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கும் இரானி கோப்பை போட்டி தொடரிலிருந்து முஷீர் கான் விலகியதாக சொல்லப்படுகிறது. இதே போன்று ரஞ்சி டிராபி 2024 – 2025 தொடரிலிருந்தும் அவர் விலகுவதாக சொல்லப்படுகிறது.