MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • வாங்கிய அடி, அவமானம், மோசமான தோல்விக்கு எல்லாம் பழி தீர்க்குமா மும்பை இந்தியன்ஸ்? டாஸ் வென்று பேட்டிங்!

வாங்கிய அடி, அவமானம், மோசமான தோல்விக்கு எல்லாம் பழி தீர்க்குமா மும்பை இந்தியன்ஸ்? டாஸ் வென்று பேட்டிங்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 38ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 22 2024, 07:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL Match 2024

Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL Match 2024

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 38ஆவது லீக் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

29
Mumbai Indians,

Mumbai Indians,

மும்பை இந்தியன்ஸ் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேஹல் வதேரா, பியூஷ் சாவ்லா மற்றும் நுவன் துஷாரா ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும், ரொமாரியோ ஷெப்பர்டு, ஆகாஷ் மத்வால் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

39
Rajasthan Royals

Rajasthan Royals

இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குல்தீப் சென் நீக்கப்பட்டு சந்தீப் சர்மா அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த போட்டியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியா தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்.

49
Rajasthan Royals vs Mumbai Indians,

Rajasthan Royals vs Mumbai Indians,

இதுவரையில் 130 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்டியா மொத்தமாக 2450 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 10 அரைசதங்களும் எடுத்துள்ளார். அதோடு, 57 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார்.

59
Rajasthan Royals vs Mumbai Indians,

Rajasthan Royals vs Mumbai Indians,

மும்பை இந்தியன்ஸ்:

இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டிம் டேவிட், நேஹல் வதேரா, முகமது நபி, ஜெரால்டு கோட்ஸி, பியூஸ் சாவ்லா, ஜஸ்ப்ரித் பும்ரா.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சஹால்.

69
Rajasthan Royals vs Mumbai Indians,

Rajasthan Royals vs Mumbai Indians,

இதுவரையில் இரு அணிகளும் மோதிய 29 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் 13 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் 15 போட்டிகளும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 14ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

79
Rajasthan Royals vs Mumbai Indians, 38th IPL Match

Rajasthan Royals vs Mumbai Indians, 38th IPL Match

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 125/9 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 127/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

89
RR vs MI, 38th IPL 2024 Match

RR vs MI, 38th IPL 2024 Match

இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 7 போட்டிகளில் 3ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 7 போட்டிகளில் 6ல் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.

99
Rajasthan Royals vs Mumbai Indians

Rajasthan Royals vs Mumbai Indians

ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இதற்கு முன்னதாக நடந்த 56 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 20 போட்டியிலும், 2ஆவதாக விளையாடிய அணி 36 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் டாஸ் வென்ற அணி 30 போட்டியிலும், டாஸ் தோற்ற அணி 26 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் 217/6. குறைந்தபட்ச ஸ்கோர் 59/10. மேலும், அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்ட ஸ்கோர் 215. இந்த மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் 3ல் வெற்றியும் ஒரு போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஹர்திக் பாண்டியா
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரோகித் சர்மா
சஞ்சு சாம்சன்
யுஸ்வேந்திர சாஹல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Harbhajan Singh House: 7 கோடி ரூபாய் பங்களா! பிரம்மாண்ட தியேட்டர், கிரிக்கெட் ரூம்...ஹர்பஜன் சிங்கின் சொகுசு அரண்மனை இதோ!
Recommended image2
ரூ.100 கொடுத்தால் தான் செல்ஃபி.. சிறுவர்களிடம் கண்டிஷன் போட்ட வைபவ் சூர்யவன்ஷி: கடைசியில் ட்விஸ்ட்!
Recommended image3
மகுடம் சூடா மன்னன்: 9000 ரன்களை கடந்த முதல் வீரர் - IPL வரலாற்றில் விராட் கோலி புதிய சகாப்தம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved