MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • மும்பைக்கு சாவு பயத்த காட்டிய ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா – கடைசில 9 ரன்களில் தோல்வி!

மும்பைக்கு சாவு பயத்த காட்டிய ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா – கடைசில 9 ரன்களில் தோல்வி!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 33ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

3 Min read
Author : Rsiva kumar
| Updated : Apr 19 2024, 01:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Punjab Kings vs Mumbai Indians, IPL 2024, 33rd Match

Punjab Kings vs Mumbai Indians, IPL 2024, 33rd Match

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 33ஆவது ஐபிஎல் 2024 போட்டி தற்போது முல்லன்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் விளையாடி 192 ரன்கள் குவித்தது.

212
Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 8 ரன்களில் ஆட்டமிழக்க, தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து 23ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். மேலும், அதிரடி காட்டிய ஸ்கை 53 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 78 ரன்களில் நடையை கட்டினார்.

312
Punjab Kings

Punjab Kings

கேப்டன் ஹர்திக் பாண்டியா சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. அவர் 10 ரன்களில் நடையை கட்டினார். டிம் டேவிட் 14 ரன்னிலும், ரொமாரியோ ஷெப்பர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி வரை விளையாடிய திலக் வர்மா 18 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது.

412
Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சாம் கரண் 2 விக்கெட் எடுத்தார். கஜிசோ ரபாடா ஒரு விக்கெட் கைப்பற்றினார். இது அவரது 250ஆவது விக்கெட் ஆகும். அதுவும் இஷான் கிஷான் விக்கெட்டை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

512
Mumbai Indians

Mumbai Indians

பின்னர் கடின இலக்க துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாம் கரண் மற்றும் பிராப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை ஜெரால்டு கோட்ஸி வீசினார்.

612
Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

அந்த ஓவரில் முதல் பந்தில் சாம் கரண் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தை வைடாக வீசினார். மேலும், அந்த பந்து பவுண்டரிக்கும் சென்றது. அடுத்த பந்தில் லெக் பைஸில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. பின்னர் தனது முதல் பந்தை எதிர்கொண்ட பிராப்சிம்ரன் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

712
Mumbai Indians IPL 2024

Mumbai Indians IPL 2024

அடுத்து வந்த ரிலீ ரோஸோவ் 1 ரன்னில் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து கேப்டன் சாம் கரன் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 1 ரன்னில் நடையை கட்டினார். அப்போது பஞ்சாப் கிங்ஸ் 2.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து போட்டியின் 6.5ஆவது ஓவரில் ஹர்ப்ரீத் சிங் 13 ரன்னில் ஷ்ரேயாஸ் கோபால் பந்தில் ஆட்டமிழந்தார்.

812
Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

பஞ்சாப் கிங்ஸ் 9 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியின் 9.2ஆவது ஓவரில் ஜித்தேஷ் சர்மா 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா இருவரும் அதிரடியை தொடங்கினர். இதில், ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

912
IPL 2024 Points Table

IPL 2024 Points Table

கடைசியில் அஷுதோஷ் சர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். 9.3ஆவது ஓவரில் களமிறங்கி சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசினார். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் வெற்றியை நோக்கி சென்றது. கடைசி 4 ஓவருக்கு 28 ரன்கள் தேவையிருந்தது. ஆனால், 17.1 ஆவது ஓவரில் அஷுதோஷ் சர்மா ஆட்டமிழந்தார்.

1012
Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

அவர், 28 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 61 ரன்கள் எடுத்தார். இது அவரது முதல் ஐபிஎல் அரைசதமாகும். கடைசி 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு பஞ்சாப் தள்ளப்பட்டது. 19ஆவது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் 4ஆவது பந்தில் ஹர்ப்ரீத் பிரார் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

1112
Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

அடுத்து வந்த கஜிஸோ ரபாடா முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில், முதல் பந்திலேயே ரன் அவுட் முறையில் வெளியேற பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

1212
Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திற்கு முன்னேறியது. பஞ்சாப் கிங்ஸ் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஜெரால்டு கோட்ஸி தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஆகாஷ் மத்வால், ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அஷுதோஷ் சர்மா
ஹர்திக் பாண்டியா
மும்பை இந்தியன்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்
ரோகித் சர்மா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ருத்ராஜ் மரண அடி.. ஜாம்பவான் சாதனையை ஓவர்டேக் செய்து மாஸ்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி!
Recommended image2
நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணியின் சிக்சர் மன்னன் விலகல்! ரசிகர்கள் ஷாக்!
Recommended image3
WTC புள்ளிப் பட்டியல்: இங்கிலாந்துக்கு சரிவு, ஆஸி. ஆதிக்கம்; இந்தியா எந்த இடத்தில்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved