அப்பாடா, ஜெயிச்சிட்டோம், மார்தட்டிக் கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் – கடைசி வரை போராடிய டெல்லி தோல்வி!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 20ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Gerald Coetzee
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது லீக் போட்டி வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
Jasprit Bumrah
ரோகித் சர்மா 49 ரன்களும், இஷான் கிஷான் 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா 39 ரன்களில் வெளியேறினார். கடைசியில் டிம் டேவிட் மற்றும் ரொமாரியா ஷெப்பர்ட் இருவரும் இணைந்து அதிரடி காட்ட மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்தது. இதையடுத்து கடின இலககை துரத்திய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Mumbai Indians
அடுத்து வந்த அபிஷேக் போரெல் 41 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 1, அக்ஷர் படேல் 8, லலித் யாதவ் 3, குமார் குஷாக்ரா 0, ஜே ரிச்சர்ட்சன் 2 என்று வரிசையாக நடையை கட்டினர்.
Rohit Sharma and Romario Shepherd
கடைசி வரை அதிரடியாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸ் உள்பட 71 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி வரை தனிமரமாக நின்று டெல்லியின் வெற்றிக்காக போராடினார். எனினும், டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்து, 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
DC, Prithvi Shaw, Abishek Porel
இந்த தோல்வியின் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி, 4 தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சரிந்துள்ளது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 10ஆவது இடத்திலிருந்து 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி 9ஆவது இடம் பிடித்துள்ளது.
Khaleel Ahmed, Delhi Capitals
இந்தப் போட்டியில் மும்பையின் வெற்றிக்கு காரணமாக அந்த கடைசி ஓவரில் 32 ரன்கள் குவித்த ரொமாரியா ஷெப்பர்ட் ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும், பவுலிங்கில் 4 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஜெரால்டு கோட்ஸி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட் எடுத்தார்.
MI 234 Runs against Delhi Capitals
இந்தப் போட்டியில் பும்ரா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக ஒரு அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்:
170 – லசித் மலிங்கா – மும்பை அணிக்காக
166 – சுனில் நரைன் – கொல்கத்தா அணிக்காக
150 – ஜஸ்ப்ரித் பும்ரா -மும்பை அணிக்காக
147 – புவனேஷ்வர் குமார் – ஹைதராபாத் அணிக்காக
140 – டுவைன் பிராவோ சென்னை அணிக்காக
Rohit Sharma and Ishan Kishan
அதிவேகமாக அரைசதம் டெல்லி அணிக்காக:
17 – கிறிஸ் மோரிஸ் vs GL, 2016
18 – ரிஷப் பண்ட் vs MI, 2019
18 – பிரித்வி ஷா vs KKR, 2021
19 – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் vs MI, 2024*
MI vs DC, IPL 2024
பவுலிங்கில் அதிக ரன்கள் வாரி வழங்கிய வீரர்கள்:
65 – உமேஷ் யாதவ் vs RCB, டெல்லி, 2013
65 – ஆன்ரிச் நோர்ட்ஜே vs MI, வான்கடே, 2024*
63 - வருண் ஆரோன் vs CSK, Chennai, 2012
டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றி
150 – மும்பை இந்தியன்ஸ்*
148 – சென்னை சூப்பர் கிங்ஸ்
144 - இந்தியா
143 – லங்காஷயர்
143 – நாட்டிங்காம்ஷயர்
Romario Shepherd
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள்:
110 – விராட் கோலி
109 – சுரேஷ் ரெய்னா
103 – கிரான் போலார்டு
100 – ரோகித் சர்மா
200 ரன்களுக்கு மேல் எடுத்து மும்பை இந்தியன்ஸ் வெற்றி:
போட்டி - 14
வெற்றி – 14
தோல்வி - 0