IPL 2023: மும்பை எங்க கோட்டை: யாராலயும் ஒன்னும் செய்ய முடியாது; அடித்து சொல்லும் ரெக்கார்டு!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டிகளில் அதிக முறை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கிறது.
Bengaluru: Royal Challengers Bangalore batters Virat Kohli and Glenn Maxwell walk back after winning over Mumbai Indians as Mumbai Indian captain Rohit Sharma also walks in dejected look during the IPL 2023 match between Royal Challengers Bangalore and Mumbai Indians at M Chinnaswamy Stadium, in Bengaluru, Sunday, April 2, 2023. (PTI Photo/Shailendra Bhojak)(PTI04_02_2023_000422B)
ஐபிஎல் கிரிககெட் திருவிழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது.
இதுவரையில் சென்னை மற்றும் மும்பை மோதிய போட்டிகளில் மும்பை இந்தின்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதுவரையில் நடந்த 34 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிஙஸ் அணி 14 போட்டிகளில் தான் வெற்றி பெற்றிருக்கிறது.
Bengaluru: Mumbai Indians Rohit Sharma (Captain) before the start of the IPL 2023 match between Royal Challengers Bangalore and Mumbai Indians at M Chinnaswamy Stadium in Bengaluru, Sunday, April 2, 2023. (PTI Photo/Shailendra Bhojak)(PTI04_02_2023_000200B)
அதுமட்டுமின்றி மும்பை வான்கடே மைதானைத்தில் சென்னைக்கு எதிராக நடந்த 10 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
Image credit: Mumbai Indians
கடந்த 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் நடந்த 5 போட்டிகள் முறையே:
கடந்த 2022, மே 12: மும்பை இந்தியன்ஸ் 103/5, சென்னை சூப்பர் கிங்ஸ் 97/10 - மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
Chennai: Chennai Super Kings bowler Moeen Ali celebrates after a wicket of Lucknow Super Giants during the IPL 2023 cricket match between Chennai Super Kings and Lucknow Super Giants, at M. A. Chidambaram Stadium, in Chennai, Monday, April 3, 2023. (PTI Photo/R Senthil Kumar)(PTI04_03_2023_000364B)
2022, ஏப்ரல் 21: சென்னை சூப்பர் கிங்ஸ் 156/7, மும்பை இந்தியன்ஸ் 155/7, சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
2021, செப்டம்பர் 19, சென்னை சூப்பர் கிங்ஸ் 156/7, மும்பை இந்தியன்ஸ் 136/8, சென்னை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
2021 மே, 01: மும்பை இந்தியன்ஸ் 219/6, சென்னை சூப்பர் கிங்ஸ் 218/4 - மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
2020, அக்டோபர் 23: மும்பை இந்தியன்ஸ் 116/0, சென்னை சூப்பர் கிங்ஸ் 114/9 - மும்பை இந்தியன்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
Image credit: PTI
இதற்கு முன்னதாக பெங்களூருவில் நடந்த 2023 ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசனுக்கான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இன்று மும்பையில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai: Chennai Super Kings bowler Moeen Ali celebrates with teammates after the wicket of Lucknow Super Giants batter KL Rahul during the IPL 2023 cricket match between Chennai Super Kings and Lucknow Super Giants, at M. A. Chidambaram Stadium, in Chennai, Monday, April 3, 2023. (PTI Photo/R Senthil Kumar)(PTI04_03_2023_000350B)
ஏற்கனவே சென்னை அணியில் டெவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, எம் எஸ் தோனி என்று ஒவ்வொருவரும் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கின்றனர். பந்து வீச்சிலும் மொயீன் அலி, சாண்ட்னர் ஆகியோர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Chennai: Chennai Super Kings batter Ruturaj Gaikwad celebrates after scoring a half century during the IPL 2023 cricket match between Chennai Super Kings and Lucknow Super Giants, at M. A. Chidambaram Stadium, in Chennai, Monday, April 3, 2023. (PTI Photo/R Senthil Kumar)(PTI04_03_2023_000261B)
ஆனால், மும்பை அணியில் இஷான் கிஷான், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங் சொதப்பி வரும் நிலையில், அதிலிருந்து மீண்டு வந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி ஜெயிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
Image credit: PTI
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக, வான்கடே மைதானத்தில் 87, 60, 39*, 19, 50, 19, 15, 13, 18 என்று ரோகித் சர்மா ரன்கள் சேர்த்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 2 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. அதுவும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது.
Thiruvananthapuram: Chennai Super Kings captain MS Dhoni and team coach Stephen Fleming during the practice session ahead of IPL match between Chennai Super Kings and Lucknow Super Giants, at MAC Stadium, in Thiruvananthapuram, Sunday, April 2, 2023. (PTI Photo/R Senthil Kumar)(PTI04_02_2023_000246B)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 92 மற்றும் 57 ரன்கள் எடுத்து மொத்தமாக 149 ரன்களுடன் ஆரஞ்சு கேப் வைத்திருக்கிறார். லக்னோ அணி வீரர் கை மேயர்ஸ் 139 ரன்களுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.