MS Dhoni IPL Retirement: கிரிக்கெட்டுக்கு பிறகு இராணுவத்தில் தான் நேரம் செல்விடுவேன் – எம்.எஸ். தோனி பிளான்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் நிலையில், அதன் பிறகு இராணுவத்தில் தான் நேரம் செலவிட இருப்பதாக கூறியுள்ளார்.
Chennai Super Kings, MS Dhoni
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி மறக்க முடியாத வகையில் நாடே கொண்டாடும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். அவரது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு வடிவங்களில் அழியாத முத்திரை பதித்துள்ளார்.
Chennai Super Kings
இந்திய அணிக்கு 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, 2013 ஆசிய கோப்பை, 2010 மற்றும் 2016 ஆசிய கோப்பையை வென்று கொடுத்து நாடே போற்றும் ஒரு கேப்டனாக திகழ்ந்தார்.
IPL 2024
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, எம்.எஸ்.தோனி ஆகஸ்ட் 15, 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஐபிஎல் தொடர்களில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார்.
MS Dhoni Review System
நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரின் 16ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக டிராபியை வென்றது. இந்த சீசன் தான் தோனியின் கடைசி சீசன் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில், லீக் போட்டியின் போது அதெல்லாம் இல்லை என தோனி கூறினார். கடைசியாக உடல்நிலையை பொறுத்து தான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
Dhoni IPL Retirement
இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடர் நெருங்க நெருங்க ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோ, புகைப்படங்கள் எல்லாம் வைரலானது. இது ஒரு புறம் இருந்த நிலையில், சிஎஸ்கே அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
MS Dhoni Indian Army
இதில், தோனி கேப்டனாக இடம் பெற்றிருந்தார். இதன் மூலமாக ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் தோனி விளையாடுகிறார் என்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது 42 வயதாகும் நிலையில், வரும் ஜூலை மாதம் 43 வயதை எட்டிவிடுவார். ஆதலால், அடுத்தடுத்த சீசன்களில் விளையாடுவது என்பது முடியாத காரியமாக இருக்க கூடும்.
MS Dhoni Retirement
இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என்று தோனியிடம் ரசிகர் ஒருவர் கேள்வு எழுப்பியிருக்கிறார். அதற்கு பதிலளித்த தோனி கூறியிருப்பதாவது: ஓய்விற்கு பிறகு என்ன செய்யப் போகிறேன் என்று இதுவரை நான் யோசிக்கவில்லை.
MS Dhoni
இன்னமும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதால் அதற்கான நேரமும், காலமும் இன்னும் வரவில்லை. ஓய்விற்கு பிறகு என்ன செய்ய போகிறேன் என்பதை யோசிக்க ஆர்வம் இருக்கிறது.
CSK: MS Dhoni
ஆனால், கண்டிப்பாக ராணுவத்திற்கு என்று கூடுதல் நேரம் செலவிடுவேன். இதுவரையில் கடந்த சில ஆண்டுகாலமாக என்னால் போதுமான நேரம் செலவிட முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். ராணுவத்தில் தோனி பாராசூட் படைப்பிரிவில் லெப்டினண்ட் கர்னல் என்ற பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.