அந்த நாள் ஞாபகம்… 13 ஆண்டுகளுக்கு பிறகு தான் பெற்று கொடுத்த 2011 உலகக் கோப்பையை தொட்டு பார்த்த தோனி!
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை டிராபியை தோனி தொட்டு பார்த்து ரசித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
MS Dhoni and ODI World Cup 20211
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 29ஆவது ஐபிஎல் லீக் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.
MS Dhoni and 2011 World Cup
நேற்று மும்பையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி மற்றும் ரோகித் சர்மா மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசிய புகைப்படங்கள் வைரலானது.
CSK, IPL 2024
இந்த நிலையில் தான் தற்போது ஒரு கேப்டனாக பெற்றுக் கொடுத்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை டிராபியை எம்.எஸ்.தோனி தொட்டு பார்த்த அந்த மகிந்த அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையிலுள்ள பிசிசிஐயின் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த 2011 உலகக் கோப்பை டிராபியுடன் போஸ் கொடுத்தார்.
2011 ODI World Cup
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணியும், குமார் சங்கக்காரா தலைமையிலான இலங்கை அணியும் மோதின.
2011 World Cup
இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக மஹேலா ஜெயவரத்னே 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Gautam Gambhir
பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு விரேந்திர சேவாக் 0 ரன்னில் வெளியேறினார். சச்சினும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 35 ரன்களில் நடையை கட்டினார்.
2011 World Cup
கவுதம் காம்பீர் மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். காம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழக்க, யுவராஜ் சிங் களமிறங்கி 21 ரன்கள் எடுத்தார்.
IND vs SL, 2011 World Cup
கடைசியில் தோனி சிக்ஸர் அடிக்க இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2011 World Cup
இந்த வெற்றியின் மூலமாக தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியது. இந்த டிராபியை தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு தோனி மும்பையிலுள்ள பிசிசிஐ தலைமையகத்தில் பார்த்து மகிழ்ந்துள்ளார்.