- Home
- Sports
- Sports Cricket
- ஐசிசி டெஸ்ட் ரேங்க்! சிராஜ், ஜெய்ஸ்வால் கலக்கல்! நம்பர் 1 பேட்ஸ்மேன், பவுலர் யார் தெரியுமா?
ஐசிசி டெஸ்ட் ரேங்க்! சிராஜ், ஜெய்ஸ்வால் கலக்கல்! நம்பர் 1 பேட்ஸ்மேன், பவுலர் யார் தெரியுமா?
ஐசிசி டெஸ்ட் ரேங்க்கில் முகமது சிராஜ், ஜெய்ஸ்வால் ஆகியோர் முன்னேறி சிறந்த இடத்தை பிடித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Icc Test Rankings! Mohammed Siraj and Jaiswal Climb
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் டிரா செய்து சாதனை படைத்தது. இந்திய கேப்டன் சுப்மன் கில், முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, வாஷிஙடன் சுந்தர், கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் என அனைத்து வீரர்களும் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் தான் இந்த இளம் படை ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாமல் இங்கிலாந்தில் சாதித்து காட்டியுள்ளது.
ஜோ ரூட் முதலிடம்
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து தொடருக்குப் பிறகு டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டது. இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே முதல் பத்து இடங்களுக்குள் உள்ளனர். கேப்டன் சுப்மன் கில் 13வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து ஸ்டார் வீரர் ஜோ ரூட் முதலிடத்தில் தொடர்கிறார்.
908 ரேட்டிங் புள்ளிகள் அவருக்கு உள்ளன. இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகளில் 537 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து மிடில் ஆர்டர் வீரர் ஹாரி புரூக் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஒரு இடம் முன்னேறி புரூக் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 868 ரேட்டிங் புள்ளிகள் அவர் பெற்றுள்ளார்.
ஜெய்ஸ்வால் 6வது இடம்
புரூக்கின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 858 ரேட்டிங் புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு சென்றுள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் நான்காவது இடத்தில் தொடர்கிறார். கடைசியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஸ்மித் விளையாடினார். ரேட்டிங் புள்ளிகள் 816. 792 ரேட்டிங் புள்ளிகளைக் கொண்ட இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 6வது இடத்தில் உள்ளார். அவர் மூன்று இடங்கள் முன்னேறியுள்ளார்.
முகமது சிராஜ் அசத்தல்
கால்விரலில் காயம் காரணமாக ஓவல் டெஸ்டில் விளையாடாத ரிஷப் பண்ட் 8வது இடத்தில் உள்ளார். 768 ரேட்டிங் புள்ளிகளை அவர் பெற்றுள்ளார். பவுலிங் தரவரிசையை பொறுத்தவரை இங்கிலாந்துக்கு தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ் 12 இடங்கள் முன்னேறி, தனது வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு 15வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். இதேபோல் மற்றொரு இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா இங்கிலாந்து தொடரில் சிறப்பாக பந்துவீசியதன் மூலம் தரவரிசையில் 25 இடங்கள் முன்னேறி 59-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா முதல் இடம்
இது மட்டுமின்றி ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் முதல் 30 இடங்களுக்குள் உள்ளனர். இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க வீரர் கசிகோ ரபடா 2வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 3வது இடத்திலும் உள்ளனர்.