MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • 4 போட்டிகளுக்கு பிறகு ரூ.24.75 கோடிக்கு ஒர்த்துன்னு காட்டிய மிட்செல் ஸ்டார்க் – 4 ஓவரில் 28 ரன்னு 3 விக்கெட்!

4 போட்டிகளுக்கு பிறகு ரூ.24.75 கோடிக்கு ஒர்த்துன்னு காட்டிய மிட்செல் ஸ்டார்க் – 4 ஓவரில் 28 ரன்னு 3 விக்கெட்!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 28ஆவது லீக் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Apr 14 2024, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
KKR vs LSG, Mitchell Starc

KKR vs LSG, Mitchell Starc

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28ஆவது லீக் போட்டி தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணியில் குயீண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

26
Mitchell Starc, Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

Mitchell Starc, Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

இதில், கொல்கத்தா அணியில் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவர் வீசினார். இந்த ஓவரில் முதல் 2 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 10 ரன்கள் கொடுத்தார். மீண்டும் போட்டியின் 3ஆவது ஓவரை வீசினார்.

36
Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

இந்த ஓவரில் ஒரு பவுண்டரி உள்பட 8 ரன்கள் கொடுத்தார். தொடர்ந்து தனது 3ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் தீபக் ஹூடா விக்கெட்டை கைப்பற்றினார். மேலும் அந்த ஓவரில் 5 ரன்கள் கொடுத்தார்.

46
Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

கடைசியாக போட்டியின் 20ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் முதல் பந்திலேயே நிக்கோலஸ் பூரனின் விக்கெட்டை கைப்பற்றினார். அதோடு கடைசி பந்தில் அர்ஷத் கானின் விக்கெட்டை எடுத்தார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி உள்பட 6 ரன்கள் கொடுத்தார். மொத்தமாக இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

56
Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

இதன் மூலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முதல் போட்டியிலேயே 4 ஓவர்கள் வீசி 53 ரன்கள் வாரி வழங்கி விமர்சனத்திற்கு உள்ளானார்.

66
KKR vs LSG, 28th IPL Match

KKR vs LSG, 28th IPL Match

இதே போன்று 2 ஆவது போட்டியில் 4 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்தார். 3ஆவது போட்டியில் 3 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 4ஆவது போட்டியில் 3 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்தார். இந்த நிலையில் இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
KKR vs LSG
கே. எல். ராகுல்
மிட்செல் ஸ்டார்க்
சுனில் நரைன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு.. ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு கிடைக்கும்?
Recommended image2
சிலிண்டர் தட்டுப்பாடு.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?
Recommended image3
T20 World Cup Prize Money: T20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி கிடைத்தது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved