MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • டெல்லி கனவில் மண்ணை போட்ட ஆயுஷ் பதோனி – 167 ரன்கள் குவித்த லக்னோ!

டெல்லி கனவில் மண்ணை போட்ட ஆயுஷ் பதோனி – 167 ரன்கள் குவித்த லக்னோ!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 26ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 12 2024, 09:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26ஆவது லீக் போட்டி தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

இதில், டாஸ் வென்று லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி கேஎல் ராகுல் மற்று குயீண்டன் டி காக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், குயீண்டன் டி காக் 19 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் கலீல் அகமது ஓவரில் ஆட்டமிழந்தார்.

311
Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

அடுத்து வந்த தேவ்தத் படிக்கலும் 3 ரன்களில் அதே மாதிரி எல்பிடபிள்யூ முறையில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 8 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் தனது முதல் ஓவரை வீசிய நிலையில் அந்த ஓவரின் 3ஆவது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

411
Ayush Badoni

Ayush Badoni

அடுத்த பந்திலேயே கூக்ளியில் நிக்கோலஸ் பூரன் கோல்டன் டக் முறையில் கிளீன் போல்டானார். அதன் பிறகு வந்த தீபக் கூட 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக லக்னோ அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

511
Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

மீண்டும் வந்த குல்தீப் யாதவ் கேப்டன் கேஎல் ராகுல் விக்கெட்டை கைப்பற்றினார். நடுவர் அவுட் தர மறுக்க ரிஷப் பண்ட் ரெவியூ கேட்டார். பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து கேஎல் ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

611
Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

இதன் மூலமாக குல்தீப் யாதவ் 2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடைசியில் எஞ்சிய 2 ஓவர்களையும் வீசி 20 ரன்களில் ஓவரை முடித்தார். குர்ணல் பாண்டியாவும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

711
DevDutt Padikka

DevDutt Padikka

ஒரு கட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 12.6 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்து தடுமாறியது. கடைசியில் ஆயுஷ் பதோனி மற்றும் அர்ஷாத் கான் இருவரும் அதிரடியாக விளையாடினர். 

811
Kuldeep Yadav, Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

Kuldeep Yadav, Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

இதில் ஆயுஷ் பதோனி 31 பந்துகளில் அரைசதம் அடித்து லக்னோ அணிக்கு ஆறுதல் கொடுத்தார். அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று அர்ஷாத் கான் 16 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

911
KL Rahul, Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

KL Rahul, Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

இதன் மூலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 6ஆவது விக்கெட்டிற்கு அதிகபட்சமாக 73* ரன்கள் பார்ட்னர்ஷிர் எடுத்துக் கொடுத்து அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர்.

1011
Lucknow Super Giants vs Delhi Capitals

Lucknow Super Giants vs Delhi Capitals

இதே போன்று ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 8 விக்கெட்டிற்கும் ஆயுஷ் பதோனி மற்றும் அர்ஷாத் கான் இருவரும் 73* ரன்கள் பார்ட்னர்ஷிர் எடுத்துக் கொடுத்துள்ளனர். இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.

1111
Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

பவுலிங்கைப் பொறுத்த வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், கலீல் அகமது 2 விக்கெட்டும், இஷாந்த் சர்மா மற்றும் முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியே 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அக்சர் படேல்
கே. எல். ராகுல்
குருணல் பாண்டியா
குல்தீப் யாதவ்
ரிஷப் பண்ட்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ: இந்தியாவுக்கு வந்த சிக்கல்! 29 ரன்கள் அடித்த ஆகாஷ் தீப் திடீர் விலகல் – என்ன நடந்தது?
Recommended image2
IND vs NZ 2nd Test: 2வது டெஸ்டில் இந்தியாவிற்கு பேரதிர்ச்சி... அடுத்தடுத்து விக்கெட் இழந்து தவிப்பு
Recommended image3
New Zealand vs India: பொறுமையை சோதித்த பிளண்டெல்... பொட்லம் பண்ணிய இந்தியா... முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து ஆல் அவுட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved