IPL 2025: கழற்றிவிட்ட மும்பை இந்தியன்ஸ் - கோடிகளை கொடுத்து ரோகித் சர்மாவுக்கு வலைவீசும் 3 ஐபிஎல் அணிகள்!
ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மாவை தங்கள் அணியில் இணைத்துக்கொள்ள லக்னோ, டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்களில் ஒருவரான ரோகித் சர்மாவை தங்கள் அணியில் இணைத்துக்கொள்வதன் மூலம் கோப்பையை வெல்ல முடியும் என இந்த அணிகள் நம்பிக்கை கொண்டுள்ளன.
Mumbai Indians
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை டிராபி வென்று கொடுத்த ரோகித் சர்மாவை ஒரே அடியாக கேப்டன் பொறுப்பிலிருந்து அணி நிர்வாகம் நீக்கி அதிர்ச்சி அளித்தது. அதோடு நிற்கவில்லை, ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாகவும் நியமித்து ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனை எதிர்கொண்டது. இந்த சீசனில் அடி மேல் அடி வாங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் பரிதாப நிலைக்கு சென்றது.
IPL 2025 - Rohit Sharma
வேறு வழியின்றி ஹர்திக் பாண்டியா நீயே பார்த்துக் கொள் என்று ரோகித் சர்மாவிடம் கேப்டன் பொறுப்பை கொடுத்த காட்சிகளையும் நாம் கண்டோம். அப்படியிருக்கும் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு பிரமாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது. நாளுக்கு நாள் ஐபிஎல் 2025 குறித்து அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது.
Mumbai Indians - Rohit Sharma
பிசிசிஐ மற்றும் அணி உரிமையாளர்கள் தொடர்ந்து மெகா ஏலம் மற்றும் தக்க வைக்கப்படும் வீரர்கள், விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்து பேசி வருகின்றனர். இதுவரையில் சரியான முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் ரோகித் சர்மாவுக்கு லக்னோ, டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் வலைவீசி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
Lucknow Super Giants - IPL 2025
இந்த 3 அணிகளுமே ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை. இதில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 3 முறை மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கிறது. ஆனால், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இதுவரையில் 17 சீசன்கள் விளையாடியுள்ளன. ஆனால் ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை.
LSG, IPL 2025
ஒரு ஐபிஎல் கேப்டனாக ரோகித் சர்மா 87 வெற்றிகளை கொடுத்துள்ளார். இதில் வெற்றி சதவிகிதம் 50 சதவிகிதம் ஆகும். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கேஎல் ராகுல் மற்றும் லக்னோ அணி உரிமையாளர் வாக்குவாதம் காரணமாக ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக லக்னோ அணியிலிருந்து ராகுல் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா லக்னோ அணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Delhi Capitals, IPL 2025
டெல்லி கேபிடல்ஸ்:
இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், டெல்லி கேபிடல்ஸ் தலைமை நிர்வாகத்தை மாற்ற பார்க்கிறது. ரிக்கி பாண்டிங்கின் பயிற்சி ஒப்பந்தம் முடிந்த நிலையில் அவர் விலகியதாக கூறப்படுகிறது. இப்போது ரிஷப் பண்ட் வேறொரு அணிக்கு மாற இருப்பதாக கூறப்படுகிறது. இது எல்லாம் நடந்தால் ரோகித் சர்மா டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தாவுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான தொகையை டெல்லி கேபிடல்ஸ் சேமித்து வருவதாக சொல்லப்படுகிறது.
Punjab Kings - IPL 2025
பஞ்சாப் கிங்ஸ்
கடந்த சீசன் மட்டுமின்றி ஐபிஎல் தொடர் ஆரம்பித்தது முதல் இதுவரையில் ஒரு முறை கூட டிராபி அடிக்கவில்லை. ஆனால், பஞ்சாப் அணி இதுவரையில் 156 பிளேயர்ஸை மாற்றியதோடு மட்டுமல்லாமல் 10 கேப்டன்களையும் மாற்றியிருக்கிறது. ஆனால், என்ன, பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. இதற்கு அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் இல்லாதது தான் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
PBKS, Rohit Sharma
ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக ஷிகர் தவான் மற்றும் சாம் கரண் இருவரும் விடுவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரோகித் சர்மா பஞ்சாப் அணியில் இடம் பெற்று விளையாட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.