MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • சரவெடியாக வெடித்த பிலிப் சால்ட் – இதெல்லாம் ஜூஜூபின்னு 15.4 ஓவரிலே வெற்றி பெற்ற கேகேஆர்!

சரவெடியாக வெடித்த பிலிப் சால்ட் – இதெல்லாம் ஜூஜூபின்னு 15.4 ஓவரிலே வெற்றி பெற்ற கேகேஆர்!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக இன்று நடந்த 28ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Apr 14 2024, 08:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match, Philip Salt

Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match, Philip Salt

கொல்கத்தாவின் ஹோம் மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 28ஆவது லீக் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். 

26
Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 45 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் கேகேஆர் அணியில் மிட்செல் ஸ்டார் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

36
Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி 7 ரன்களில் வெளியேறினார்.

46
Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

இவரைத் தொடர்ந்து பிலிப் சால்ட் உடன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்தார். இதில் ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடினாலும், பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலமாக தனது 4ஆவது ஐபிஎல் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

56
Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

Kolkata Knight Riders vs Lucknow Super Giants, 28th Match

மேலும், தொடர்ந்து விளையாடி 47 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 89 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக முதல் முறையாக லக்னோ அணிக்கு எதிராக கொல்கத்தா வெற்றி பெற்றுள்ளது.

66
KKR vs LSG, 28th IPL Match

KKR vs LSG, 28th IPL Match

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் தான் 4ஆவது போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்று லக்னோவிற்கு எதிராக முதல் வெற்றியை பெற்றுள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
KKR vs LSG
கே. எல். ராகுல்
மிட்செல் ஸ்டார்க்
சுனில் நரைன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hardik Pandya Life: Mumbai Indians கேப்டன் ஹர்திக் பாண்டியா: 9-ஆம் வகுப்பு வரை படிப்பு..140 கோடி சொத்து;வியக்க வைக்கும் வாழ்க்கை!
Recommended image2
MS Dhoni Fear: கேப்டன் கூல்-க்கு இவ்வளவு பயமா? - ஊசி என்றாலே தெறித்து ஓடும் தோனி..
Recommended image3
மொடா குடி வார்னர்..! மூச்சுமுட்ட குடித்துவிட்டு போலீசிடம் வசமாக சிக்கிய டேவிட் வார்னர்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved