MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • காட்டு காட்டுனு காட்டிய கரண் சர்மா – ஸ்பைடர் மேனாக ரன் அவுட் செய்த பிலிப் சால்ட்: KKR 1 ரன்னில் த்ரில் வெற்றி!

காட்டு காட்டுனு காட்டிய கரண் சர்மா – ஸ்பைடர் மேனாக ரன் அவுட் செய்த பிலிப் சால்ட்: KKR 1 ரன்னில் த்ரில் வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஈடன் கார்டனில் நடந்த 36ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு ரன்னில் தோல்வியை தழுவிய அதிர்ச்சி அளித்தது.

4 Min read
Author : Rsiva kumar
Published : Apr 21 2024, 08:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
116
Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது. இதுவரையில், விளையாடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
216
Karan Sharma

Karan Sharma

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஒரு ரன்னில் தோல்வி அடைந்து தொடர்ந்து 6ஆவது போட்டியில் தோல்வியை தழுவியது. மேலும், விளையாடிய 8 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வியை தழுவியது நிலையில் பிளே ஆஃப் வாய்ப்பையு கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

316
Philip Salt, Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

Philip Salt, Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 36ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கேகேஆர் அணியில் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஆரம்பத்திலேயே தடுமாறிய சுனில் நரைனுக்கு யாஷ் தயாள் யார்க்கரில் காலை பதம் பார்த்துவிட்டார். அதன் பிறகு 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அங்கிரிஸ் ரகுவன்ஷி 3 ரன்களில் நடையை கட்டினார்.

416
Harshit Rana, Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

Harshit Rana, Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

போட்டியின் 4ஆவது ஓவரை லாக்கி பெர்குசன் வீசினார். இந்த ஓவரில் பிலிப் சால்ட் 6, 4, 4, 6, 4, 4 என்று மொத்தமாக 28 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக கேகேஆர் 4 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்தது. ஆனால், அடுத்த ஓவரிலேயே பிலிப் சால்ட் ஆட்டமிழந்தார். அவர் 14 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 48 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

516
Andre Russell, KKR vs RCB 36th IPL 2024 Match

Andre Russell, KKR vs RCB 36th IPL 2024 Match

இவரைத் தொடர்ந்து வந்த வெங்கடேஷ் ஐயர் 17 ரன்னிலும், ரிங்கு சிங் 24 ரன்னிலும் நடையை கட்டினர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தன் பங்கிற்கு பொறுப்பை உணர்ந்து விளையாடி ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 20 ஆவது அரைசதத்தை அடித்தார். அவர் 36 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

616
Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

இதையடுத்து ஆண்ட்ரே ரஸல் மற்றும் ரமன் தீப் சிங் கடைசியில் இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக கேகேஆர் 200 ரன்களை கடந்தது. கடைசி ஓவரை யாஷ் தயாள் சிறப்பாக வீசியதால், அந்த ஓவரில் 16 ரன்கள் எடுக்கப்பட்டது. இறுதியாக கேகேஆர் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது. ரமன் தீப் சிங் 9 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 24 ரன்னும், ஆண்ட்ரே ரஸல் 20 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 27 ரன்னும் எடுத்தனர்.

716
Gautam Gambhir, Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

Gautam Gambhir, Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆர்சிபி அணியில் யாஷ் தயாள் மற்றும் கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் லாக்கி பெர்குசன் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஆனால், இதுவரையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி 204 ரன்களை மட்டுமே அதிகபட்சமாக சேஸ் செய்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 204 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

816
Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

பின்னர் கடின இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி நல்ல தொடக்கம் கொடுத்த போதிலும் அவர் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 18 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்ஷித் ராணா வீசிய புல்டாஸ் பந்தில் ஆட்டமிழந்து நோபால் கேட்டார். ஆனால், ரெவியூவில் பந்து ஸ்டெம்பிற்கு மேல் சென்ற நிலையில் அவுட் உறுதி செய்யப்பட்டது. இவரைத் தொடர்ந்து ஃபாப் டூப்ளெசிஸ் 7 ரன்னில் வெளியேறினார்.

916
Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

அதன் பிறகு வில் ஜாக்ஸ் மற்றும் ரஜத் படிதார் இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், இருவருமே மாறி மாறி அரைசதம் அடித்தனர். வில் ஜாக்ஸ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 55 ரன்னில் ஆட்டமிழக்க, ரஜத் படிதாரும் 23 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 52 ரன்னில் நடையை கட்டினார்.

1016
Karn Sharma, Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

Karn Sharma, Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

கேமரூன் க்ரீன் 6, மஹிபால் லோம்ரார் 4 ரன்னிலும், சுயாஷ் பிரபுதேசாய் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நம்பிக்கை நட்சத்திரமான தினேஷ் கார்த்திக் தன் பங்கிற்கு 18 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 25 ரன்கள் எடுத்தார்.

1116
Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

எனினும் கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கரண் சர்மா களத்தில் இருந்தார். கடைசி ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் சென்றது. 3ஆவது மற்றும் 4ஆவது பந்திலேயும் கரண் சர்மா சிக்ஸர் அடித்தார்.

1216
Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

இதன் மூலமாக ஆர்சிபி வெற்றியை நெருங்கியது, கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 4ஆவது பந்தில் கரண் சர்மா ஆட்டமிழந்தார். கடைசியாக லாக்கி பெர்குசன் களமிறங்கினார். 2 ரன் எடுத்தால் சூப்பர் ஓவர், ஒரு ரன் எடுத்தால் கேகேஆர் வெற்றி, 3 ரன் எடுத்தால் ஆர்சிபி வெற்றி என்ற நிலை இருந்தது.

1316
Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

ஆனால், அவர், ஆஃப் சைடு திசையில் அடித்து விட்டு 2 ரன்கள் எடுக்க ஓடினார். ஆனால், ரமன்தீப் சிங் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் த்ரோ செய்யவே, அவரும் பந்தை பிடித்து ஸ்பைடர் மேன் மாதிரி டைவ் அடித்து ஸ்டெம்பில் ஸ்டெமிங் செய்வது போன்று ரன் அவுட் செய்தார்.

1416
Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

இதன் மூலமாக ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இறுதியாக ஆர்சிபி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன்னில் தோல்வியை தழுவியது.

1516
Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

இதன் மூலமாக கேகேஆர் த்ரில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5 வெற்றிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது. 2ஆவது இடத்திலிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3ஆவது இடத்திற்கு சென்றது. ஆர்சிபி விளையாடிய 8 போட்டிகளில் 7 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

1616
Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, 36th Match

மேலும், பிளே ஆஃப் வாய்ப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. எஞ்சிய 6 போட்டிகளில் ஜெயித்தால் கூட 14 புள்ளிகள் பெறும். ஆனாலும், மற்ற அணிகளின் புள்ளிகள் மற்றும் நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தினேஷ் கார்த்திக்
கேகேஆர் vs ஆர்சிபி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
சுனில் நரைன்
விராட் கோலி
 
2nd ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(31.0 ov)99/5
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli Records: விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள் முறியடிக்க வாய்ப்புள்ள 5 சாதனைகள்
Recommended image2
IPL 2027: கலீல் அகமது, எல்லிஸை தூக்கிய SRH... பதிலுக்கு CSK வாங்கிய 2 வீரர்கள்! கடுப்பில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
Recommended image3
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved