என் வாழ்க்கையில் நான் பார்த்ததுலயே அவருதாங்க பெஸ்ட் பிளேயர்..! வியந்து புகழ்ந்த ஆஸி., ஹெட்கோச் ஜஸ்டின் லாங்கர்

First Published 13, Nov 2020, 2:57 PM

தன் வாழ்வில் தான் பார்த்ததிலேயே விராட் கோலி தான் மிகச்சிறந்த வீரர் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், முதல்முறையாக இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆடவில்லை. இந்த முறை அவர்கள் ஆடுவதால், டெஸ்ட் தொடர் மிகக்கடுமையான போட்டியாக அமையும். ஆனால் இந்த முறை விராட் கோலி முழு தொடரிலும் ஆடவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு, தனக்கு குழந்தை பிறக்கவிருப்பதால், 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியா திரும்புகிறார்.

விராட் கோலி ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும். ஆஸ்திரேலிய அணிக்கு, கோலி ஆடாதது அனுகூலமான விஷயமாக இருக்கும். இந்திய அணியில் விராட் கோலி ஆடி, ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் ஆடினால் தான் போட்டி கடுமையாக இருக்கும்.

ஆனால் விராட் கோலி ஆடாதது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 2014-2015 தொடரில்  692 ரன்களை குவித்தார் கோலி. அந்த தொடரில் அவர் தான் அதிக ரன்களை குவித்த வீரர். 2018-2019 தொடரில் 292 ரன்களை குவித்தார் கோலி. புஜாராவுக்கு அடுத்து 2வது அதிகபட்ச ஸ்கோர் இது.

இந்நிலையில், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி தான், தனது வாழ்க்கையில் தான் பார்த்த மிகச்சிறந்த வீரர் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜஸ்டின் லாங்கர், நான் ஏற்கனவே இதை சொல்லியிருக்கிறேன். எனது வாழ்வில் நான் பார்த்த மிகச்சிறந்த வீரர் கோலி தான். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவரது பேட்டிங்கிற்காக மட்டும் நான் இப்படி சொல்லவில்லை. அவரது எனர்ஜி, களத்தில் அவரது வெற்றி வேட்கை ஆகியவையும் அதற்கு காரணம். அவர் காட்டும் எனர்ஜியும் வேகமும் கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது என்று விராட் கோலியை புகழ்ந்து பேசினார்.

loader