இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிலும் அவர் இல்லை: எப்போதுதான் வருவார்?
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஜஸ்ப்ரித் பும்ரா
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா ஐசிசி உலகக் கோப்பையில் பும்ரா பங்கேற்கவில்லை. இவ்வளவு ஏன், இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெற்றிருந்தார். அதன் பிறகு திடீரென்று தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
ஜஸ்ப்ரித் பும்ரா
அதன் பிறகு இந்தியா வந்த நியூசிலாந்து டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்தியா வந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் கூட பும்ரா இடம் பெறவில்லை. அதன் பிறகு, ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்தது.
ஜஸ்ப்ரித் பும்ரா
இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
ஜஸ்ப்ரித் பும்ரா
இதையடுத்து, 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 17 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது. இதையடுத்து நடக்கும் 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பிருப்பதாக முதலில் சொல்லப்பட்டது.
ஜஸ்ப்ரித் பும்ரா
அப்படி அவர் அந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடினால் தான் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவரால் சிறப்பாக விளையாட முடியும் என்று சொல்லப்பட்டது.
ஜஸ்ப்ரித் பும்ரா
ஆனால், அடுத்து நடக்க இருக்கும் 3ஆவது மற்றும் 4 ஆவது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
ஜஸ்ப்ரித் பும்ரா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை கைப்பற்றிய நிலையில், அடுத்தடுத்து நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இந்திய அணியில் பும்ரா இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
ஜஸ்ப்ரித் பும்ரா
இல்லையென்றால், அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளன. மும்பை அணியில் இடம் பெற்றுள்ள பும்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறாத நிலையில், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்று அணிக்கு பக்கபலமாக இருக்கின்றனர்.
ஜஸ்ப்ரித் பும்ரா
இவர்களைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சுழலில் கலக்கி வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் சுழலில் ஆதிக்கம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.