2020ல் கோலியை விட அதிகம் சம்பாதித்த பும்ரா..!
2020ல் கோலியைவிட அதிக போட்டிகளில் ஆடி அதிக வருவாயை ஈட்டியுள்ளார் ஃபாஸ்ட் பவுலர் பும்ரா.
இந்திய கிரிக்கெட் வீரர்களை 4 பிரிவுகளாக பிரித்து, வீரர்களின் சீனியாரிட்டி மற்றும் முக்கியத்துவத்தை பொறுத்து வருடாந்திர ஊதியம் வழங்கிவருகிறது பிசிசிஐ. அதுபோக, ஆடும் போட்டிகளுக்கு தனியாக ஊதியம் வழங்கப்படுகிறது.
ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒரு ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், ஒரு டி20 போட்டிக்கு ரூ. 3 லட்சமும் ஊதியமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2020ம் ஆண்டில் விராட் கோலியை விட ஒரு டெஸ்ட் போட்டியில் அதிகம் ஆடியவர் என்ற வகையில், கோலியை விட பும்ரா அதிகம் சம்பாதித்துள்ளார்.
பும்ரா 2020ல் 4 டெஸ்ட்(ஆஸி.,க்கு எதிராக நடந்துவரும் மெல்போர்ன்(2வது) டெஸ்ட்) போட்டிகளிலும் 9 ஒருநாள் போட்டிகளிலும் 8 டி20 போட்டிகளிலும் ஆடி ரூ.1.38 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.
2020ல் 10 டி20 போட்டிகள், 9 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள கோலி ரூ.1.29 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். கோலிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியதுடன், கடைசி 3 போட்டிகளில் ஆடாமல் இந்தியா திரும்பிவிட்டார். மெல்போர்னில் நடந்துவரும் 2வது டெஸ்ட்டில் ஆடியதன்மூலம், கோலியை விட அதிக வருவாய் ஈட்டியுள்ளார் பும்ரா. இந்த பட்டியலில் ஜடேஜா 3ம் இடத்தில் உள்ளார்.