சிஎஸ்கே அணியின் ஆலோசகராக ஐபிஎல் முன்னாள் சி.ஓ.ஓ நியமனம்..!
சிஎஸ்கே அணியின் ஆலோசகராக ஐபிஎல் முன்னாள் சி.ஓ.ஓ சுந்தர் ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அந்த சீசனில் தான், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சிஎஸ்கே, முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது.
எனவே 14வது சீசனில் அசத்தும் தீவிரத்தில் உள்ள சிஎஸ்கே அணி, மொயின் அலி, கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் மற்றும் புஜாரா ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது. தோனி மற்றும் அம்பாதி ராயுடு ஆகியோர் 14வது சீசனுக்கு தயாராகும் விதமாக ஏற்கனவே சென்னை வந்துவிட்டனர்.
இந்நிலையில், சிஎஸ்கே அணியின் ஆலோசகராக மதுரையை சேர்ந்த, முன்னாள் ஐபிஎல் சி.ஓ.ஓ-வான சுந்தர் ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியின் கமெர்சியல் மற்றும் மார்க்கெட்டிங் தொடர்பான விவகாரங்களை சுந்தர் ராமன் கையாள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த சுந்தர் ராமன், ஐபிஎல்லின் முன்னாள் சி.ஓ.ஓ ஆவார். 2013ம் ஆண்டு ஐபிஎல்லில் நடந்த ஸ்பாட் ஃபிக்ஸிங் குறித்த விசாரணை நடந்ததால் 2015ம் ஆண்டு ஐபிஎல் சி.ஓ.ஓ பொறுப்பிலிருந்து சுந்தர் ராமன் விலகியது குறிப்பிடத்தக்கது.