IPL 2023: ஹெல்மெட்டை தூக்கி எறிந்த ஆவேஷ் கானுக்கு லெவல் 1 நடவடிக்கை; டூப்ளெசிஸ்க்கு ரூ.12 லட்சம் ஃபைன்!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த அணியின் வீரர் ஆவேஷ் கான் ஆவேசமாக ஹெல்மெட்டை தூக்கி எறிந்த நிலையில், அவர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் பரப்பரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியும், விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும், த்ரில்லாகவும் இருக்கிறது. குஜராத் போட்டியில் கொல்கத்தா அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. அதே போன்று ஆர்பிசி போட்டியில் லக்னோ அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி 21 ரன்னும், மேக்ஸ்வெல் 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாப் டூபிளெசிஸ் 79 ரன்னுடன் களத்தில் இருந்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு மேயர்ஸ் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தீபக் கூடா 9 ரன்னில் வெளியேறினார். குர்னல் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 23 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து லக்னோ அணி தடுமாறியது. அதன் பிறகு தான் மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர், ஆர்சிபி பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
ஸ்டாய்னிஸ் 30 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ராகுலும் 18 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவர் தொடர்ந்து 8, 20, 35 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், நேற்றைய போட்டியில் 18 ரன்களில் வெளியேறினார். இதுவரையில் லக்னோ ஆடிய 4 போட்டிகளில் மொத்தமாக 81 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இவர்களைத் தொடர்ந்து அதிரடி நாயகன் நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். களமிறங்கிறது முதல் பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார். 15 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் நிக்கோலஸ் பூரனும் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக கேஎல் ராகுல் 14 பந்துகளில் அரைசதம், பேட் கம்மின்ஸ் 14 பந்துகளில் அரைசதம், யூசுப் பதான் 15, சுனில் நரைன் 15 மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
ஒரு கட்டத்தில் லக்னோவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில் பூரன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க் வுட்டும் சொல்லும்படி ஒன்றுமில்லை. கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த இம்பேக்ட் பிளேயர் ஆயுஷ் பதானி சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஹிட் விக்கெட் முறையில் வெளியேறினார். ஆனால், அவர் அடித்தது சிக்சர் தான். இதையடுத்து கடைசி ஓவரில் லக்னோ வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு கட்டத்தில் 4 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், 2 பந்துகளில் 1 ரன் தேவைப்பட்டது. அப்போது 5ஆவது பந்தில் உனத்கட் ஆட்டமிழந்தார். கடைசியில் ஆவேஷ் கான் களமிறங்கினார். கடைசி பந்தில் பைஸ் முறையில் ஒரு ரன் கிடைக்க, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இந்த நிலையில், கடைசி பந்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற உற்சாகத்தில் ஹெல்மெட்டை தூக்கி எறிந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வீரர் ஆவேஸ் கான் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐபிஎல் கட்டுப்பாடுகள் விதிப்படி இந்த கொண்டாட்டம் வெறுப்பை தூண்டும் விதமாக இருக்கிறது. ஆகையால் லெவல் 1 விதிப்படி, அவர் மீது நடவடிக்கை எடுக்கிறோம். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து களத்தில் இருந்த நடுவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
ஐபிஎல் லெவல் 1 குற்றம்:
கிரிக்கெட் உபகரணங்கள், ஆடைகள், மைதானம், கட்டிடம் உள்ளிட்டவைகளுக்கு சேதம் விளைவித்தல் - 2 போட்டிகள் வரை தடை, இரண்டு போட்டிகள் வரை இடைநீக்கம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
ஆவேன் கானைத் தொடர்ந்து ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டநேரத்தை விட ஓவர்கள் வீசி முடிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அவர் மீது முதல் நடவடிக்கையாக அவருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு முறை இது போன்று ஓவர்கள் வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அந்த அணியின் கேப்டன் குறைந்தது ஒரு போட்டியில் விளையாட முடியாது என்ற நிலை ஏற்படும். இப்போது அவருக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.