MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2026: RCB vs SRH முதல் மேட்ச்! பெங்களூருவில் ஜெயிக்கப் போவது யார்?

IPL 2026: RCB vs SRH முதல் மேட்ச்! பெங்களூருவில் ஜெயிக்கப் போவது யார்?

ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியிலேயே ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடக்கும் இந்த ஆட்டத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? இரு அணிகளின் பலம், பலவீனம் மற்றும் முந்தைய ரெக்கார்ட்ஸ் என்ன சொல்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Velmurugan s
Published : Mar 27 2026, 10:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
RCB vs SRH : டிபெண்டிங் சாம்பியன் பெங்களூருவுக்கு ஹைதராபாத் ஷாக் கொடுக்குமா?
Image Credit : our own

RCB vs SRH : டிபெண்டிங் சாம்பியன் பெங்களூருவுக்கு ஹைதராபாத் ஷாக் கொடுக்குமா?

ஐபிஎல் 2026 சீசன் ஒரு மாஸான தொடக்கத்துக்கு ரெடியாகிடுச்சு. மார்ச் 28-ம் தேதி பெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் முதல் போட்டி நடக்குது. போன முறை சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் மோதுறாங்க. போன சீசன்ல கப் அடிச்ச தெம்புல RCB இருந்தாலும், ரெக்கார்ட்ஸ் படி பார்த்தா ஹைதராபாத் டீம்தான் கெத்தா இருக்கு.
26
RCB vs SRH : நேருக்கு நேர் ரெக்கார்டுகளில் ஹைதராபாத் ஆதிக்கம்
Image Credit : Pinterest

RCB vs SRH : நேருக்கு நேர் ரெக்கார்டுகளில் ஹைதராபாத் ஆதிக்கம்

ஐபிஎல் வரலாற்றில் இந்த ரெண்டு டீமும் மோதும்போது மேட்ச் எப்பவுமே சூப்பரா இருக்கும். இதுவரைக்கும் 26 தடவை நேருக்கு நேர் மோதியிருக்காங்க. இதுல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 13 மேட்ச்ல ஜெயிச்சிருக்கு. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 11 மேட்ச்ல ஜெயிச்சிருக்கு. ரெண்டு மேட்ச்ல முடிவு எதுவும் இல்லை. இந்த கணக்கைப் பார்த்தா, RCB-யை விட SRH தான் டாப்ல இருக்கு. ஆனா, இப்போதைய ஃபார்ம் வெச்சு எது வேணாலும் நடக்கலாம்.

Related Articles

Related image1
IPL Records: ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, மூன்று முறை.. IPL வரலாற்றையே மிரள வைத்த ஒரே ஒரு பவுலர்..!
Related image2
IPL 2026: இரண்டாம் கட்ட அட்டவணை வெளியீடு..! மீண்டும் களைகட்டும் கிரிக்கெட் திருவிழா..!
36
டிபெண்டிங் சாம்பியன் ஆர்சிபி பலம் என்ன?
Image Credit : Getty

டிபெண்டிங் சாம்பியன் ஆர்சிபி பலம் என்ன?

ரஜத் படிதார் கேப்டன்சியில RCB போன சீசன்ல வரலாறு படைச்சது. 18 வருஷ காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வெச்சு முதல் முறையா ஐபிஎல் டிராபியை ஜெயிச்சாங்க. இந்த முறையும் RCB டீம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. குறிப்பா, விராட் கோலி, ஃபில் சால்ட் ஓப்பனிங் ஜோடி எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமா இருக்கும். இவங்களோட, தேவ்தத் படிக்கல்லும் டொமஸ்டிக் கிரிக்கெட்ல செம ஃபார்ம்ல இருக்கார். மிடில் ஆர்டர்ல டிம் டேவிட், ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட் மாதிரி பெரிய ஹிட்டர்ஸ் இருக்காங்க. வெங்கடேஷ் ஐயர் வந்தது டீமுக்கு இன்னும் பலம் சேர்த்திருக்கு.
46
IPL 2026 : பெங்களூருவுக்கு பவுலிங் சிக்கல்கள்
Image Credit : Instagram/royalchallengers.bengaluru + X/@rend_VKohli

IPL 2026 : பெங்களூருவுக்கு பவுலிங் சிக்கல்கள்

பேட்டிங் ஸ்ட்ராங்கா இருந்தாலும், RCB-க்கு பவுலிங்ல சில சிக்கல்கள் இருக்கு. டீமோட முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் முதல் சில போட்டிகள்ல ஆடமாட்டார். இது டீமுக்கு பெரிய அடி. ஹேசில்வுட் இல்லாத குறையை சீனியர் பவுலர் புவனேஷ்வர் குமார் சரிசெய்யணும். யஷ் தயாளும் இந்த சீசன்ல இல்லை. நியூசிலாந்து பவுலர் ஜேக்கப் டஃபியின் ஆட்டம் இந்த சீசன்ல RCB-க்கு ரொம்ப முக்கியம். ஸ்பின்ல, க்ருனால் பாண்ட்யாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தை டீம் நம்பியிருக்கு.
56
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு.. டாப் ஆர்டரே முக்கிய பலம்
Image Credit : SRH Instagram

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு.. டாப் ஆர்டரே முக்கிய பலம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டீம் தன்னோட டாப் ஆர்டர் பேட்டிங்கைதான் அதிகமா நம்பியிருக்கு. அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன்-னு மூணு அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்காங்க. ரெகுலர் கேப்டன் பேட் கம்மின்ஸ் இல்லாததால, இஷான் கிஷன் முதல் சில போட்டிகளுக்கு கேப்டனா இருக்கலாம். போன சீசன்ல ஹென்ரிச் கிளாசென்தான் அதிக ரன் அடிச்சார். அனிகேத் வர்மா நல்ல ஃபினிஷரா முத்திரை பதிச்சார். இந்த முறை நிதிஷ் குமார் ரெட்டி, லியாம் லிவிங்ஸ்டன் மேல பெரிய எதிர்பார்ப்பு இருக்கு.
66
எஸ்‌ஆர்‌எச் பவுலிங் பலவீனங்கள்
Image Credit : SRH\Instagram

எஸ்‌ஆர்‌எச் பவுலிங் பலவீனங்கள்

பேட்டிங்கோட ஒப்பிடும்போது, சன்ரைசர்ஸ் பவுலிங் கொஞ்சம் வீக்கா தெரியுது. பேட் கம்மின்ஸ் இல்லாதது டீமுக்கு பெரிய இழப்பு. வேகப்பந்து வீச்சை இஷான் மலிங்கா, ஹர்ஷல் படேல், ஜெயதேவ் உனத்கட் வழிநடத்தணும். டெத் ஓவர்கள்ல ஹர்ஷல் படேல் ரொம்ப முக்கியம். ஸ்பின்லையும் பெரிய பெயர்கள் இல்லை. இளம் ஸ்பின்னர் ஜீஷன் அன்சாரி இந்த சீசன்ல தன் திறமையை நிரூபிக்கணும். சின்னசாமி மாதிரி சின்ன கிரவுண்ட்ல ஹைதராபாத் பவுலர்கள் எப்படி பெங்களூரு பேட்ஸ்மேன்களை தடுப்பாங்கன்னு பார்க்க சுவாரஸ்யமா இருக்கும்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐபிஎல்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL Records: ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, மூன்று முறை.. IPL வரலாற்றையே மிரள வைத்த ஒரே ஒரு பவுலர்..!
Recommended image2
கிரிக்கெட்டில் அடுத்த லெவலுக்கு செல்லும் வைபவ் சூர்யவன்ஷி... இனி டி20-ல் அபிஷேக் ஷர்மாவுக்கு பதில் இவரா?
Recommended image3
ஹர்திக்கின் ஹார்ட்-வின்னிங் மொமண்ட்..! வான்கடே ஊழியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் கொடுத்த பாண்டியா..!
Related Stories
Recommended image1
IPL Records: ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, மூன்று முறை.. IPL வரலாற்றையே மிரள வைத்த ஒரே ஒரு பவுலர்..!
Recommended image2
IPL 2026: இரண்டாம் கட்ட அட்டவணை வெளியீடு..! மீண்டும் களைகட்டும் கிரிக்கெட் திருவிழா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved