கவலை படாதீங்க எல்லத்தையும் நான் பாத்துக்குறேன்; லக்னோவுடன் கை கோர்த்த இடதுகை அசுரன்
IPL 2025 - lsg : ஐபிஎல் 2025 கோப்பையை வெல்லும் நோக்கில், பல்வேறு அணிகள் மாற்றங்களைச் செய்து வருகின்றன. அந்த வகையில், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒரு மாஸ்டர் பிளானுடன் களமிறங்கியுள்ளது. ஒரு இடதுகை பௌலிங் லெஜண்டை மென்டாராக அறிவித்துள்ளது.
ஜாகிர் கான், கேஎல் ராகுல், எல்எஸ்ஜி, ஐபிஎல் 2025
IPL 2025 - lsg : இந்தியன் பிரீமியர் லீக் 2025 ( ஐபிஎல் 2025) க்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதையொட்டி, 10 ஐபிஎல் அணிகளிலும் தங்கள் அணியில் பெரிய மாற்றங்களை செய்து வருகின்றன. அதன்படி வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) கோப்பையை வெல்வதையே இலக்காகக் கொண்டு இப்போதே உத்திகளை வகுத்து வருகிறது. தனது மாஸ்டர் பிளானின் ஒரு பகுதியாக ஒரு இடதுகை பௌலிங் லெஜண்டை களமிறக்கியுள்ளது.
கேஎல் ராகுல் , இந்தியா
ஐபிஎல் 2025 சீசனுக்காக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர், நட்சத்திர பந்து வீச்சாளர் ஜாகிர் கானை தனது மென்டாராக நியமித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இதற்கு முன்பு கௌதம் கம்பீர் ஐபிஎல் 2023 வரை லக்னோ அணிக்கு மென்டாராக இருந்தார். கம்பீர் அதே பதவியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸில் சேர்ந்து ஐபிஎல் 2024 இல் அந்த அணியை சாம்பியன் ஆக்கினார். இப்போது அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
ஜாகிர் கான், எல்எஸ்ஜி, ஐபிஎல் 2025
ஜாகிர் கானை தனது மென்டாராக நியமித்ததை அறிவிக்க எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கொல்கத்தாவில் இன்று சிறப்பு கூட்டம் நடத்தினார். ஜாகிர் கானும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
வரவிருக்கும் ஐபிஎல் 2025 சீசனுக்கு முன் நடைபெறும் மெகா ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கூட முக்கிய பங்கு வகிக்க வாய்ப்புள்ளது. "எல்எஸ்ஜியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தேவையான வழிமுறை இருப்பதை உறுதி செய்வேன். அடுத்த சீசன் சிறப்பானதாக இருக்கும்" என்று ஜாகிர் குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள திறமையை அடையாளம் காண்பதில் உதவுவதற்கு அன்-கேப்ட் வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கும் விதிமுறைகளைத் தொடர வேண்டும் என்று ஜாகிர் கருத்து தெரிவித்துள்ளார். "இம்பேக்ட் வீரர் விதிமுறைக்கு நான் ஆதரவளிக்கிறேன், ஏனெனில் இது அன்-கேப்ட் வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறது" என்று ஜாகிர் தெரிவித்தார்.
ஜாகிர் கான்,ரோகித் சர்மா
ஜாகிர் இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர். தனியாளாக இந்தியாவுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். 2018 முதல் 2022 வரை ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் முதலில் கிரிக்கெட் இயக்குனராகவும், பின்னர் உலகளாவிய மேம்பாட்டுத் தலைவராகவும் இருந்தார். மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் (டெல்லி டேர்டெவில்ஸ்) ஆகிய மூன்று அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தம் 100 போட்டிகளில் 7.58 எக்கானமி விகிதத்தில் 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.