MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • KKR vs RCB: ஈடன் கார்டனில் ஷாருக்கான் முன்பு அதிரடி காட்டிய அஜிங்க்யா – கேகேஆர் 174 ரன்கள் குவிப்பு!

KKR vs RCB: ஈடன் கார்டனில் ஷாருக்கான் முன்பு அதிரடி காட்டிய அஜிங்க்யா – கேகேஆர் 174 ரன்கள் குவிப்பு!

IPL 2025 KKR vs RCB Live Score : ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கிய ஐபிஎல் 2025 தொடரின் முதல் லீக் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 22 2025, 09:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

KKR vs RCB IPL 2025 Live Score : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடர் இன்று கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஷ்ரேயா கோஷல், திஷா பதானி, கரண் அவுஜ்லா ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் போடப்பட்ட டாஸில் ஐபிஎல் 2025 தொடரில் ஒரு கேப்டனாக அறிமுகமாகும் தனது முதல் போட்டியிலேயே ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Ajinkya Rahane, Rajat Patidar, IPL 2025, KKR vs RCB

Ajinkya Rahane, Rajat Patidar, IPL 2025, KKR vs RCB

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் குயீண்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், டி காக் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார். எனினும் அவர் 4 ரன்னிலேயே ஜோஷ் ஹசில்வுட் ஓவர் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய கேப்டன் அஜிங்க்யா ரஹானே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதோடு ஒரு கேப்டனாக தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

35
Kolkata Knight Riders, IPL 2025, KKR vs RCB

Kolkata Knight Riders, IPL 2025, KKR vs RCB

இதே போன்று அதிரடியாக விளையாடி வந்த சுனில் நரைன் 26 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸர் உள்பட 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் அஜிங்க்யா ரஹானேவும் 31 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயர் 6, ரிங்கு சிங் 12, ஆண்ட்ரே ரஸல் 4 என்று கேகேஆர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

45
Royal Challengers Bengaluru, IPL 2025

Royal Challengers Bengaluru, IPL 2025

கொல்கத்தா அணியானது முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டிற்கு 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்த 5 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் எடுத்திருந்தது. பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க கேகேஆர் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 30 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.

55
IPL 2025 KKR vs RCB Live Score

IPL 2025 KKR vs RCB Live Score

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆர்சிபி அணியில் குர்ணால் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யாஷ் தயாள், ராசிக் தார் சலாம் மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஜோஷ் ஹசில்வுட் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 174 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடி வருகிறது. விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஐபிஎல் 2025, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரஜத் படிதார், கேகேஆர், ஆர்சிபி, ஸ்போர்ட்ஸ் நியூஸ் தமிழ், டி20 கிரிக்கெட், கேகேஆர் vs ஆர்சிபி, ஈடன் கார்டன், கொல்கத்தா, KKR vs RCB, IPL 2025, IPL 2025 Opening Ceremony, Eden Gardens, Kolkata, Kolkata Knight Riders, Indian Premier League, Virat Kohli, Ajinkya Rahane, Rajat Patidar, Royal Challengers Bengaluru, IPL 2025 KKR vs RCB Live Score, Krunal Pandya

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கேகேஆர் vs ஆர்சிபி
விராட் கோலி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அஜிங்க்யா ரஹானே
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஐபிஎல் 2025
ஐபிஎல்
KKR எதிர் RCB ஆட்ட நாயகன்
ஐபிஎல் 2025 தொடக்க விழா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Recommended image2
Abhishek Sharma: ஐசிசி டி20 ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் ஷர்மா!
Recommended image3
IND vs NZ 3rd T20: அதிவேக சதம்.. அதிவேக பவர்பிளே ரன்.. ஒரே போட்டியில் பல ரிக்கார்டுகளை உடைத்த இந்தியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved