ஐபிஎல் தொடருக்கு ரெடியாகும் வகையில் ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விலகிய ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.
Hardik Pandya
இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசிய ஹர்திக் பாண்டியாவிற்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.
Hardik Pandya
அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், எனினும் அவருக்கு ஓய்வு தேவை என்றும் சொல்லப்பட்டது. இதன் காரணமாக எஞ்சிய போட்டிகளில் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை.
Hardik Pandya Ruled out
மேலும், உலகக் கோப்பை தொடருக்கு பிறகு நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
Hardik Pandya
அந்த தொடர் மட்டுமின்றி, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றிலும் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை.
Hardik Pandya
டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஒருநாள் தொடருக்கு கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். தற்போது இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
Hardik Pandya
இந்த தொடரைத் தொடர்ந்து இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்க இருக்கிறது. வரும் ஜனவரி 11, 14 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடக்கும் இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவார் என்று கூறப்பட்டது.
Hardik Pandya
இந்த நிலையில் தான் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு அவர் தயாராகும் வகையில், இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
Hardik Pandya
ஏற்கனவே சூர்யகுமார் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் நிலையில், அவரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
Hardik Pandya
ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா அல்லது ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரில் யாரேனும் ஒருவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக செயல்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Afghanistan Series
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியானது டிரேட் முறையில் வாங்கியது. அதுமட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.
Hardik Pandya
இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது வரும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.