MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • கேஎல் ராகுலுக்குப் பதிலாக களமிறங்கும் சுப்மன் கில்: டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு!

கேஎல் ராகுலுக்குப் பதிலாக களமிறங்கும் சுப்மன் கில்: டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 01 2023, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
இந்தியா ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட்

இந்தியா - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

28
இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்திய அணியில் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்த கேஎல் ராகுலுக்குப் பதிலாக சுப்மன் கில் அணியில் இடம் பெற்றுள்ளார். இன்றைய போட்டியில் அவர் தான் ரோகித் சர்மா உடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். மேலும், முகமது ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
 

38
ஓரங்கட்டப்பட்ட கேஎல் ராகுல்

ஓரங்கட்டப்பட்ட கேஎல் ராகுல்

ஆஸ்திரேலியா அணியில் பேட் கம்மின்ஸ் நாடு திரும்பியதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 

48
இந்தியா - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட்

இந்தியா - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட்

இந்தியா வந்த ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

58
இந்தியா - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட்

இந்தியா - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட்

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் நடக்கிறது. இதில், இந்திய அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும். ஆஸ்திரேலியா 2ஆவது இடத்திற்கு தள்ளப்படும்.
 

68
இந்தூர் டெஸ்ட்

இந்தூர் டெஸ்ட்

ஏற்கனவே இந்தூரில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதுவரையில் இந்தூரில் வெளிநாட்டு அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் இது வரலாற்று சாதனையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

78
இந்தியா:

இந்தியா:

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்),  சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்) ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.
 

88
ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியா: டிரேவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரே (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்,  மேத்யூ குன்மேன், மார்னஸ் லபுசேஞ்ச், நாதன் லையன், டோட் முர்ஃபி, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க்

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கே. எல். ராகுல்
ரோகித் சர்மா

Latest Videos
Recommended Stories
Recommended image1
நியூசிலாந்திடம் மண்டியிட்ட இலங்கை.. டி20 உலகக்கோப்பையில் இருந்து அவுட்.. பாகிஸ்தானுக்கும் சிக்கல்!
Recommended image2
செமி ஃபைனலுக்கு இந்தியாவுக்குச் சிக்கலா? ஜிம்பாப்வேயை வீழ்த்தினால் மட்டும் போதாது - முழு விவரம்!
Recommended image3
அரையிறுதிக்கு ஆப்பு வைத்த இங்கிலாந்து! பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி - நடக்குமா மிராக்கிள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved