MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • 9ஆவது முறையாக ஏமாற்றத்துடன் வெளியேறிய மகளிர் இந்திய அணி – ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்ல!

9ஆவது முறையாக ஏமாற்றத்துடன் வெளியேறிய மகளிர் இந்திய அணி – ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்ல!

India Women Loss Semi Final Chance: மகளிர் T20 உலகக் கோப்பை 2024 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து அரையிறுதிக்கு சென்றது. இதனால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பறிபோன நிலையில் 9ஆவது முறையாக டிராபி இல்லாமல் வெறும் கையோடு வெளியேறியுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Oct 14 2024, 11:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

India Women Loss Semi Final Chance and Eliminated From Womens T20 World Cup 2024: துபாயில் நடைபெற்ற மகளிர் T20 உலகக் கோப்பை 2024 போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் அரையிறுதிக்குள் நுழையும் இந்தியாவின் கனவு பறிபோனது. 2016க்குப் பிறகு நியூசிலாந்து அணி முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவிந்தது. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி பீல்டிங்கில் பல கேட்சுகளை கோட்டைவிட்டது. இதையடுத்து அரையிறுதி கனவோடு பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

39
Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா ஓரளவு பார்ட்னர்ஷிப் எடுத்து கொடுத்த போதிலும் பின் வரிசை வீராங்கனைகள் கம்பெனி கொடுக்கவில்லை. இதனால், இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் அடித்தார்.

எனினும் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இருந்தது. அதாவது நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் நெட் ரன் ரேட்டில் 2ஆவது இடத்தில் உள்ள இந்திய மகளிர் அணி எளிதில் அரையிறுதிக்கு முன்னேறும் நிலை இருந்தது.

49
Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசி கேப்டன் ஷோஃபி டிவைன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

59
Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

இதனால் பாகிஸ்தானுக்கு வெற்றி பெற நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மோசமாகச் சரிந்தது. 11.4 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியுடன், நியூசிலாந்து அணி நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளைப் பெற்று ‘ஏ பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

69
Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

ஆஸ்திரேலியா அணி எட்டு புள்ளிகளுடன் முதலிடத்தையும், நியூசிலாந்து அணி ஆறு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தன. தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்ததுதான் அரையிறுதி வாய்ப்பை இழக்கக் காரணமாக அமைந்தது.

79
Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

சுழற்பந்து வீச்சாளர் அமெலியா கெர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், வேகப்பந்து வீச்சாளர்களான லியா தஹு (1/8) மற்றும் ஈடன் கார்சன் (2/7) ஆகியோர்தான் நியூசிலாந்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். பாகிஸ்தான் அணி 12 ஓவர்களுக்குள் இலக்கை அடைந்தால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், அதற்கு முன்பே ஆட்டமிழந்துவிட்டது.

89
Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

முன்னதாக, பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து அணியை குறைந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்தினர். தொடக்க ஆட்டக்காரர்களான சூசி பேட்ஸ் (28) மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் (17) ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்தனர். அவர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தபோது, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர்.

99
Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

Pakistan Women vs New Zealand Women, Womens T20 World Cup 2024

ஆஃப்-பிரேக் பந்து வீச்சாளர் உமைமா சோஹைல் (4 ஓவர்களில் 1/14) மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் நாஷ்ரா சந்து (4 ஓவர்களில் 3/18) ஆகியோர் நடு ஓவர்களில் அற்புதமாகப் பந்து வீசினர். 21 டாட் பந்துகளை வீசி, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 2nd Test: 2வது டெஸ்டில் இந்தியாவிற்கு பேரதிர்ச்சி... அடுத்தடுத்து விக்கெட் இழந்து தவிப்பு
Recommended image2
New Zealand vs India: பொறுமையை சோதித்த பிளண்டெல்... பொட்லம் பண்ணிய இந்தியா... முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து ஆல் அவுட்
Recommended image3
NZ vs IND : 2வது டெஸ்டிலும் அதே மிஸ்டேக் செய்த இந்தியா... முதல் நாள் முடிவில் நியூசிலாந்து ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved